Pudhumai Penn Scheme : கல்லூரி படிக்கும் மாணவிகளுக்கு ரூ.1000 கொடுக்கப்படும் புதுமைப் பெண் திட்டத்துக்கு புதிதாக எப்படி விண்ணப்பிப்பது?
Pudhumai Penn Scheme : கல்லூரி படிக்கும் மாணவிகளுக்கு ரூ.1000 வழங்கும் தமிழ்நாடு அரசின் புதுமைப் பெண் திட்டத்துக்கு புதிதாக எப்படி விண்ணப்பிப்பது? என இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
1/9கல்லூரி படிக்கும் மாணவிகளுக்கு புதுமைப் பெண் (Pudhumai Penn Scheme) திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்குகிறது. மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு உறுதி திட்டத்தின் கீழ் இத்திட்டம் 2022 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தபடுகிறது.
2/9இப்போது தமிழ்புதல்வன் மற்றும் புதுமைப் பெண் திட்டத்தில் புதிதாக 2 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்த ஆண்டு சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கும் மாதம் இனி ரூ.1000 கிடைக்கும்.
3/9ஆனால், புதுமைப் பெண் திட்டத்தில் எப்படி சேருவது? அதற்கான தகுதிகள் என்ன? என்ற கேள்வி பொதுவெளியில் இருக்கிறது. எனவே, புதுமைப் பெண் திட்டத்தில் சேருவதற்கான விதிமுறைகளை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
4/9மாணவிகள் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் படித்து தமிழ்நாட்டில் உயர்கல்வி பயில்பவராக இருத்தல் வேண்டும்.
5/9தனியார் பள்ளியில் Right to Eduction-ன் கீழ் 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை பயின்ற பின் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்த மாணவியர் இத்திட்டத்தில் பயன்பெறலாம்.
6/9இளநிலை கல்வி பெறும் அனைத்து மாணவியரும், அதாவது, இளநிலை முதலாம் ஆண்டு சேரும் மாணவியர்களுக்கு, தொழிற்கல்வி/மருத்துவக் கல்வி 2ஆம் ஆண்டு முதல் 5ஆம் ஆண்டு வரை பயிலும் மாணவிகளும் விண்ணப்பிக்கலாம்.
7/9இத்திட்டத்திற்காக புதியதாக உருவாக்கப்பட்டுள்ள இணையதளம் http://penkalvi.tn.gov.in வழியாக மாணவிகள் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யலாம். இத்திட்டத்தில் பயன்பெறுவது குறித்து விவரங்களுக்கு கட்டணமில்லா தொலைப்பேசி எண் -14417 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்.
8/9மாணவிகள் தனிப்பட்ட முறையில் விண்ணப்பிக்க கூடாது, விண்ணப்பிக்கவும் முடியாது. தாங்கள் படிக்கும் கல்வி நிறுவனங்கள் வழியாகவே விண்ணப்பிக்க முடியும். பிற உதவித் தொகை பெற்றாலும், புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் ரூ.1000 பெற தகுதியுடையவர்களே.
9/9குடும்ப சூழ்நிலை காரணமாக மேற்படிப்பு படிக்க முடியாத மாணவிகளுக்கு பொருளாதார ரீதியாக உதவுதல், பெண் குழந்தைகளின் விருப்பப்படி உயர்கல்வியை தொடர ஊக்குவித்தல் ஆகியவை இத்திட்டத்தின் நோக்கமாகும்.