மத்திய அரசு வழங்கும் 5 லட்சம் ரூபாய் தொழில் கடன் பெறுவது எப்படி?

Business loan : மத்திய அரசு சிறுகுறு தொழில்களுக்காக வழங்கும் 5 லட்சம் ரூபாய் தொழில் கடன் பெறுவது எப்படி என்பதை தெரிந்து கொள்வோம்

Central Government business loan : தொழில் கடன் வேண்டும் என்பவர்களுக்கு மத்திய அரசு வழங்கும் 5 லட்சம் ரூபாய் தொழில் கடன் பெறுவது எப்படி என்பதை தெரிந்து கொள்வோம்.

1 /8

மத்திய மாநில அரசுகள் தொழில்களையும் தொழில் முனைவோர்களையும் ஊக்குவிக்கும் வகையில் தொழில்கடன் வழங்கி வருகின்றன. அந்தவகையில் மத்திய அரசு சிறுகுறு தொழில்களுகாக கொடுக்கும் தொழில்கடன் பெறுவது எப்படி என்பதை இங்கே பார்க்கலாம்.

2 /8

பல்வேறு வகையான தொழில் கடன்கள் இருக்கும் நிலையில் தொழில்களை ஊக்குவிக்கும் வகையில் மைக்ரோ கிரெடிட் கார்டு என்ற ஒரு திட்டத்தையும் மத்திய அரசு அறிமுகப்படுத்தியிருக்கிறது. சிறு தொழில் முனைவோருக்காக கொண்டு வரப்பட்ட பிரத்தியேக கடன் அட்டை திட்டம் இதுவாகும்.

3 /8

சிறு தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்கள் தங்களுடைய தொழிலை விரிவாக்கம் செய்வதற்கும் தங்களுடைய தொழிலை மேம்படுத்துவதற்கும் இந்த கடன் அட்டை மூலம் 5 லட்சம் ரூபாய் வரை கடன் பெற்றுக் கொள்ளலாம்.  

4 /8

எந்தவித சிறு தொழில் முனைவோரும் இந்த கடன் அட்டைகளை பயன்படுத்தி எளிமையாகவும் வேகமாகவும் 5 லட்சம் ரூபாய் வரை கடன் பெற்றுக் கொள்ள முடியும்.

5 /8

சிறு சிறு கடைகளை நடத்துபவர்கள், சிறு உற்பத்தி ஆலைகளை வைத்திருப்பவர்கள் இதன் மூலம் பயன் பெறலாம். தொழில் நிறுவனங்களின் உரிமையாளர்கள் கூட இந்த திட்டத்தில் பயன்பெற முடியும் , ஆனால் அதற்கு முன்னதாக அவர்களுடைய வங்கிக் கணக்கு அறிக்கை மற்றும் அவர்கள் தொழிலின் தற்போதைய நிலை ஆகியவை ஆய்வு செய்யப்படும்

6 /8

ஆண்டுக்கு 10 - 25 லட்சம் ரூபாய்க்குள் வருமானம் ஈட்டும் சிறு தொழில் முனைவோர் அரசின் இந்த மைக்ரோ கிரெடிட் கார்டினை வாங்க முடியும் .

7 /8

மத்திய அரசின் உதயம் (Udyam portal) தளத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். உதயம் தளத்தின் msme.gov.in. என்ற அதிகாரபூர்வ பக்கத்திற்கு செல்ல வேண்டும். அதில் Quick Links என்பதை கிளிக் செய்ய வேண்டும்  

8 /8

Udyam Registration என்பதை கொடுத்து அதில் கேட்கப்படும் தரவுகளை உள்ளீடு செய்து பதிவு செய்து கொள்ள வேண்டும். இதனடிப்படையில் உங்கள் கடன் விண்ணப்பம் பரிசீலனை செய்யப்படும். பின்னர் மைக்ரோ கிரெடிட் கார்டு திட்டம் வாங்குவது குறித்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு, அதன்படி தகுதியின் அடிப்படையில் இந்த கடன் அட்டை வழங்கப்படும்.