Tamil Nadu government : 10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசு தொழிற்பயிற்சியுடன் ரூ.66000 உதவித் தொகை வழங்குகிறது.
Tamil Nadu government scheme : தமிழ்நாடு அரசு 10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு கொடுக்கும் ரூ.66 நிதியுதவித்தொகை பெறுவது எப்படி என தெரிந்து கொள்ளுங்கள்.
படித்து வேலையில்லாமல் இருக்கும் இளம் வயதினருக்கு தமிழ்நாடு அரசு மற்றும் மத்திய அரசு இணைந்து பல்வேறு தொழில் பயிற்சிகளை கொடுக்கின்றன. அதில் பங்கேற்பவர்களுக்கு நிதியுதவியும் கொடுக்கப்படுகிறது.
அந்தவகையில் பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.66000 ரூபாய் உதவித் தொகையுடன் தொழிற் பயிற்சியும் வழங்கப்படுகிறது. அதனைபெறுவது எப்படி என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
இது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இளைஞர்களுக்கு திறன் பயிற்சி அளித்து அவர்களுக்கு வேலை வாய்ப்பினை ஏற்படுத்தி தருவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இளைஞர்களுக்கான திறன் பயிற்சி அளித்து தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தி தரும் நோக்கில் " Naan Mudaivan Finishing School (NMFS) மற்றும் PMIS பயிற்சி ( Internship )" திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
Naan Mudhavan Fnishing School திட்டம் 16-35 வயது வரை உள்ள வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து, தொழில் வாய்ப்பிற்கு தகுதியானவர்களாக உருவாக்கும் திட்டமாகும். குறுகிய கால பயிற்சி வழங்கி தொழில் சந்தையில் அவர்களை தகுதிப்படுத்தும் நோக்கில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இந்த திட்டத்தின் மூலம் நிறுவனங்களுக்கு தங்களது தொழில்முறை திறன்களுக்கேற்ப பணியாளர்களாக உருவாக்கிக் கொள்ளும் வாய்ப்பு கிடைக்கின்றது. வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தொழில் தரம் வாய்ந்த பயிற்சி, வேலை வாய்ப்பு மற்றும் ஊக்கத் தொகை வழங்கப்படும்.
இதில் பங்கேற்க விரும்புபவர்கள் http://candidatetskill.tn.gov.in skillwallet/ என்ற இணையதளம் மூலம் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் தேவையான ஆவணங்களை தயார் செய்து சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும் * PMIS" Prime Minister htamship Scheme திட்டத்தின் கீழ் இளைஞர்களுக்கு திறன் பயிற்சி அளித்து வேலைவாய்ப்பினை ஏற்படுத்தும் திட்டமாக முதன்மை தனியார் நிறுவனங்களுடன் இணைந்து தானியங்கி, வங்கி கநிதிச் சேவைகள், தகவல் மற்றும் மென்பொருள் மேம்பாடு. தளவாடங்கள் உற்பத்தி மற்றும் தொழில்துறை முதலிய துறைகளில் அரசு 12 மாத கட்டணமில்லா பயிற்சியினை வழங்குகிறது.
10 ஆம் வகுப்பு. 12 ஆம் வகுப்பு, ஐ.டி.ஐ பட்டயப் படிப்பு மற்றும் பட்டப் படிப்பு முடித்த 21 முதல் 24 வயது வரை உள்ள மாணவ/ மாணவியர்கள் இதில் பங்கேற்கலாம். மேலும் http://pminternship.mca.gov.in/login/ epoxb இத்திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்.
பயிற்சி நடைபெறுமிடம் அரசினர் தொழிற் பயிற்சி நிலையம், கிண்டியில் 10.03.2025 அன்றும் அரசினர் தொழிற் பயிற்சி நிலையம், வடசென்னையில் 11.03.2025 அன்றும் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறும், சேர்க்கை முகாம்களில் கலந்து கொண்டு விண்ணப்பிக்கலாம்.
பயிற்சியில் சேரும் இளைஞர்களுக்கு மாதம் ரூ 5000/- ஊக்கத் தொகை வழங்கப்படும். ரூ.6000/- ஒருமுறை மானியமாக வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு : தொலைபேசி எண் 044 25201163 அலைபேசி எண் 7358274627, 9946640017 ஆகியவற்றின் மூலம் தொடர்பு கொண்டு கேட்டுக் கொள்ளலாம்.