தமிழ்நாடு அரசின் தோழி விடுதியில் தங்க ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி?

Thozhi Hostel : தமிழ்நாடு அரசின் தோழி விடுகளில் தங்க ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

Thozhi Hostel Booking Online : பெண்கள் மற்றும் மாணவிகளுக்காக தமிழ்நாடு அரசு தொடங்கியிருக்கும் தோழி விடுதிகளில் தங்குவதற்கு ஆன்லைனில் முன்பதிவு செய்வது எப்படி என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள். 

1 /7

தமிழக அரசின் "தோழி விடுதி" களில் தங்க விரும்பும் பெண்கள், தினசரி அல்லது மாதாந்திர அடிப்படையில் அறைகளை முன்பதிவு செய்ய https://www.tnwwhcl.in/ என்ற இணைய தளம் வாயிலாக மற்றும் 9499988009, 9445724179 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

2 /7

இது தொடர்பாக அவர் விடுத்திருக்கும் அறிவிப்பில், சென்னை மாவட்டத்தில், தமிழ்நாடு பணிபுரியும் பெண்கள் விடுதியின் வரையறுக்கப்பட்ட நிறுவனம் சென்னை அடையாற்றில் உள்ளது. 

3 /7

பணி நிமித்தமாக வெளி மாவட்டங்களில் இருந்து பிற இடங்களுக்கு சென்று பணிபுரியும் மகளிர் நலனைப் பாதுகாப்பான விடுதிகளை மாணவிகள் மற்றும் மகளிருக்கு வழங்கும் பொருட்டு தமிழ்நாடு முதலமைச்சர் ஜீலை 13, 2023 அன்று 98 படுக்கை வசதி மற்றும் நவீன வசதிகளுடன் கூடிய "தோழி விடுதிகள்" (Tamil Nadu Working Women's Hostels Corporation) என்ற பெயரில் துவங்கி வைக்கப்பட்டது.

4 /7

இவ்விடுதியில் சர்வதேச மகளிர் தினத்தினை சிறப்பு விருந்தினர்களுடன் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு இரண்டாம் ஆண்டு சர்வதேச மகளிர் தினத்தினை மார்ச் 3ம் தேதியன்று இவ்விடுதியில் தங்கியுள்ள மகளிருடன் சிறப்பாக கொண்டாடப்பட்டது. 

5 /7

24 மணி நேர பாதுகாப்பு வசதியுடன் CCTV கேமராக்கள். பயோமெட்ரிக் வருகை பதிவு. காற்றோட்டமான அறைகள், இலவச W-11 சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், பொழுது போக்கு அம்சங்கள் என நவீன வசதிகளும் உள்ளன.  

6 /7

இந்த தோழி விடுதியில் தங்குவோருக்கு மாத வாடகையாக ரூ. 4200 முதல் ரூ.6850 வரையிலான கட்டணத்தில் செயல்பட்டுவருகிறது. தமிழக அரசின் "தோழி விடுதி" களில் தங்க விரும்பும் பெண்கள் தினசரி அல்லது மாதாந்திர அடிப்படையில் அறைகளை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

7 /7

தோழி விடுதிகளில் தங்க விரும்பும் பெண்கள் wwwámwwhctin என்ற இணையதளம் வாயிலாகவும், 94999/88009, 9445724179 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.