தூங்கும்போது கூட உடல் எடையை குறைக்கனுமா? இந்த டிரிங்ஸை குடிங்க!

How To Burn Calories While Sleeping: தூங்கும்போதும் கூட உடல் எடையை குறைக்க முடியும் என்று கூறினால் உங்களால் நம்ம முடியுமா? ஆம் தூங்கும்போதும் உடல் எடையை குறைக்க சில விஷயங்களை ஃபாலோ செய்தால் கண்டிப்பாக உடல் எடையை குறைக்கலாம். 

 

Weight Loss When You Are Sleeping: நம்மில் பலர் உடல் எடையை குறைக்க தினமும் உடற்பயிற்சி, டயட் என பல விஷயங்களை ஃபாலோ செய்து வருவோம். இவையெல்லாம் செய்தாலும், நாம் தினமும் தூங்குவதற்கு முன்பு சில விஷயங்களை செய்தால் தூங்கும்போதே உடல் எடையை குறைக்கலாம். அப்படி தூங்குவதற்கு முன்பு என்ன செய்ய வேண்டும். என்ன செய்தால் உடை எடையை குறைக்கலாம் என்பதை பார்க்கலாம். 

1 /6

ஒரு ஸ்பூன் வெந்தயத்தை தண்ணீரில் சுமார் 6 மணி நேரம் ஊறவைத்து, அதனை இரவு தூங்குவதற்கு முன்பு வடிகட்டி குடிக்க வேண்டும். அப்படி குடித்தால் வயிற்றில் தேங்கியுள்ள கொழுப்பு கறையும். 

2 /6

தேங்காய் தண்ணீரை இரவு தூங்குவதற்கு முன்பு குடிக்கலாம். தேங்காய் தண்ணீரில் உள்ள எலக்ட்ரோலைட்டுகள் வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து வயிற்றைச் சுற்றியுள்ள அதிகப்படியான நீர் எடையை குறைக்க உதவுகிறது. 

3 /6

எலுமிச்சை நீர் மற்றும் தேனை தண்ணீரில் கலந்து குடிக்கலாம். எலுமிச்சை நச்சு நீக்கத்திறகு வழிவகுக்கிறது. அதில் வைட்டமின் சி நிறைந்து இருக்கிறது. அதேசமயம் தேன் கொழுப்பை குறைக்க உதவுகிறது. இதனை பருகுவதால் விரைவாக எடையை குறைக்கலாம். 

4 /6

இரவு தூங்குவதற்கு முன்பு தினமும் பாலுடன் மஞ்சள் மற்றும் விரும்பினால் வெல்லத்துடன் கலந்து குடிக்கவும். மஞ்சள் கொழுப்பை எரிக்கும் பண்புகளை கொண்டுள்ளது. இதனை குடிப்பதால் உடல் எடையை விரைவில் குறைக்கலாம். 

5 /6

பால் கலக்காத இஞ்சி டீயை இரவு தூங்குவதற்கு முன்பு குடிக்கலாம். இஞ்சி செரிமானத்திற்கு உதவுவதுடன் வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்துகிறது. இதனை இரவு தூங்குவதற்கு முன்பு குடிப்பதால் விரைவாக உடல் எடையை குறைக்க முடியும். 

6 /6

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.