Ration Card : ரேஷன் கார்டு வகையை ஆன்லைனில் மாற்றுவது எப்படி என்பதை தெரிந்து கொள்ளுங்கள்
Ration Card : ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் தங்களின் ரேஷன் கார்டை ஆன்லைனில் மாற்றுவது எப்படி என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
1/12தமிழ்நாட்டில் ரேஷன் கார்டு (Ration Card) வைத்திருப்பவர்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல் என்னவென்றால், உங்கள் ரேஷன் கார்டை எப்போது வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம்.
2/12ஏனென்றால், ஒவ்வொருவருக்கும் கொடுக்கப்படும் ரேஷன் கார்டு என்பது அந்த குடும்பத்தின் பொருளாதார அளவுகோலை அடிப்படையாக வைத்தே தமிழ்நாடு அரசு ரேஷன் கார்டு கொடுக்கிறது.
3/12அந்தியோதயா அன்ன யோஜனா, முன்னுரிமை அட்டைகள் (PHH), முன்னுரிமையற்ற ரேஷன் கார்டுக், (NPHH) முன்னுரிமையற்ற ரேஷன் கார்டுகள் சர்க்கரை, பொருளில்லா ரேஷன் அட்டை, ஆகிய ரேஷன் கார்டுகள் பொதுவாக கொடுக்கப்படுகின்றன
4/12உங்களின் ரேஷன் கார்டு இதில் எந்தவகையில் இருக்கிறது என பார்க்கவும். ஒருவேளை நீங்கள் முன்னுரிமை ரேஷன் கார்டு பெற தகுதியாக இருந்து, இப்போது உங்கள் கார்டு முன்னுரிமையற்ற ரேஷன் கார்டாக இருந்தால் அந்த கார்டின் வகையை மாற்றிக் கொள்ளலாம்
5/12சர்க்கரை ரேஷன் கார்டாக இருப்பவர்களாக இருந்து அரிசி ரேஷன் கார்டுக்கு மாற வேண்டும் என்று இருந்தாலும் உங்கள் ரேஷன் கார்டு வகையை மாற்றிக் கொள்ளலாம்.
6/12இதுகுறித்து அண்மையில் பேசிய உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி, உரிய தகுதியுடையவர்கள் தங்களின் ரேஷன் கார்டு வகையை மாற்றிக்கொள்ளலாம் என கூறியிருந்தார். அரசும் அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக கூறினார்.
7/12அதனால், உங்கள் ரேஷன் கார்டு வகையை மாற்ற ஆன்லைனில் எப்படி விண்ணப்பிப்பது என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
8/12https://www.tnpds.gov.in/ என்ற தமிழ்நாடு அரசு வெப்சைட்டுக்கு சென்றீர்கள் என்றால், அங்கே முதல் பக்கத்திலேயே ’தங்களது அட்டை வகையை மாற்ற’ என்ற ஆப்சன் இருக்கும்.
9/12அந்த லிங்கை கிளிக் செய்து ரேஷன் கார்டுடன் இணைக்கப்பட்டிருக்கும் அதிகாரப்பூர்வ மொபைல் எண்ணை உள்ளிட்டு ஓடிபி பெற்று அதனை உள்ளிட்டீர்கள் என்றால் புதிய பக்கத்துக்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள்
10/12அங்கு ரேஷன் கார்டு வகையை மாற்றுவதற்கான ஆவணங்களை பதிவேற்றம் செய்து, ரேஷன் கார்டு வகையை மாற்றுவதற்கான கோரிக்கை பூர்த்தி செய்யலாம்.
11/12இதன்பிறகு உங்களின் விண்ணப்பத்துக்கான அதிகாரப்பூர்வ பதிவெண் ஒன்றுகொடுக்கப்படும். அதை வைத்து உங்கள் விண்ணப்பம் எந்த நிலையில் இருக்கிறது? என்பதை நீங்கள் ஆன்லைனில் பார்த்துக் கொள்ளலாம். ஒரு குறிப்பிட்ட நாட்கள் இடைவெளியில் உங்கள் விண்ணப்பம் பரிசீலிக்கபட்டு, உரிய தகுதிகள் இருப்பின் ஒப்புதல் கொடுக்கப்படும்.
12/12மாதந்தோறும் உங்கள் தாலுகாவில் நடக்கும் ரேஷன் கார்டு குறைதீர் முகாம்களிலும் கலந்துகொண்டு ரேஷன் கார்டு வகையை மாற்ற விண்ணப்பம் கொடுக்கலாம்.