Ghibli புகைப்படங்களை இலவசமாக கிரியேட் செய்வது எப்படி? இதோ டிப்ஸ்!

How To Create Ghibli Images : கடந்த சில நாட்களாகவே Ghibli எனும் போட்டோ எடிட்டிங் இணையம் முழுவதும் வைரலாகி வருகிறது. இதனை உங்கள் புகைப்படத்தை அல்லது வேறு ஏதேனும் புகைப்படத்தை வைத்து எப்படி செய்ய வேண்டும் தெரியுமா?

How To Create Ghibli Images : இணையத்தில் கடந்த சில நாட்களாகவே Studio Ghibli எனும் AI டூலை உபயோகித்து பலர் புகைப்படங்களை உருவாக்கி பதிவிட்டு வருகின்றனர். நாம் சாதாரண புகைப்படங்களை கொடுத்தால், இவை அதனை அனிமேஷன் வடிவில் கிரியேட் செய்து கொடுக்கும். இதனை Chat gpt உள்ளிட்ட சில டூல்களை உபயோகித்து எப்படி உருவாக்குவது என இங்கு பார்ப்போம். 

1 /7

chat.openai.com என்ற தளத்திற்கு சென்று Log in செய்யவும். New Chat என்று டைப் செய்து புதிதாக ஒரு Chat-ஐ ஆரம்பியுங்கள்.

2 /7

உங்களுக்கு எந்த வகையான புகைப்படம் வேண்டுமோ அதை அங்கு ஆங்கிலத்தில் டைப் செய்யவும். உதாரணத்திற்கு “Girl Looking Out The Window Show Me In Studio Ghibli Style என்று டைப் செய்து பாருங்கள்.

3 /7

Enter கொடுத்தவுடன் சில விநாடிகளில் ChatGPT ஒரு புகைப்படத்தை கொடுக்கும். அதை நீங்கள் பதிவிறக்கம் செய்யலாம் அல்லது காபி செய்து வேறு எதிலாவது பேஸ்ட் செய்து உபயோகித்து கொள்ளலாம்.

4 /7

நீங்கள் உங்களுடைய சொந்த புகைப்படத்தை Ghibli அனிமேஷன் போன்று உருவாக்க வேண்டுமென்றால், அதற்கான ஆப்ஷனும் இருக்கிறது. ChatGPTல் உங்களது புகைப்படத்தை அப்லோட் செய்து விட்டு, Make it into Ghibli Art? என்று டைப் செய்து enter கொடுக்க வேண்டும். சில நிமிடங்களில், உங்களது புகைப்படம் Ghibli Art ஆக வந்துவிடும். இந்த ஆப்ஷனில் இருக்கும் சில  பிரத்யேக அம்சங்கள் இப்போதைக்கு ChatGPT Plus, Pro,  Team உள்ளிட்ட சில சப்ஸ்க்ரைப் செய்த தளங்களில் மட்டும் இருக்கின்றன. 

5 /7

GrokAI, Gemini உள்ளிட்ட தளங்களும் இப்படி Ghibli புகைப்படங்களை உருவாக்க உதவுகிறது.

6 /7

Craiyon, Artbreeder, Runway ML, Mage.space போன்ற தளங்களும் இலவசமாக Ghibli அனிமேட்டட் புகைப்படங்களை உருவாக்க உதவுகிறது. 

7 /7

உலக தலைவர்கள் முதல் உள்ளூர் தலைவர்கள் வரை அனைவரையும் இந்த Ghibli புகைப்படமாக உருவாக்குவது தற்போது ட்ரெண்டிங்கில் உள்ளது.