ஒரே நாளில் ரேஷன் கார்டு பெறுவது எப்படி? பலே ஐடியா

Published: Sep 23, 2025, 09:03 PM IST|Updated: Sep 29, 2025, 05:22 PM IST

Ration Card : ஒரே நாளில் ரேஷன் கார்டு பெறுவது எப்படி? என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்

Ration Card : ரேஷன் கார்டு ஈஸியாக ஒரே நாளில் பெற முடியும். எப்படி? என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள். முழு விவரம்

 

1/10

தமிழ்நாட்டில் ரேஷன் கார்டுக்கு (Ration Card) மனு கொடுத்து ஒரே நாளில் பெற முடியுமா? என்றால் முடியும். அதற்கான வழி இருக்கிறது.

 

2/10

ஆன்லைனில் விண்ணப்பித்து பல மாதங்களாக காத்திருகிறோம், ஆனால் ஒரே நாளில் ரேஷன் கார்டு பெற வழி இருக்கிறது என சொல்கிறீர்களே என பலரும் இதை பார்த்து கேட்க வாய்ப்பு இருக்கிறது.

 

3/10

உண்மையில் அரசு அதிகாரிகள் நினைத்தால் அது நடக்கும். வாரந்தோறும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. ஆனால், எல்லோருக்கும் ஒரே நாளில் ரேஷன் கார்டு கிடைக்குமா?என்றால் கிடைக்க வாய்ப்பில்லை. 

 

4/10

வறிய நிலையில் இருக்கும் குடும்பத்தினர், ரேஷன் கார்டு அவசர தேவை இருப்பவர்களுக்கு நிச்சயம் கிடைக்கும். அது எப்படி? என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

 

5/10

வாரந்தோறும் திங்கட்கிழமை மக்கள் குறைத்தீர்ப்பு முகாம்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் நடக்கும். இந்த முகாம்களில் கலந்து கொண்டு புதிய ரேஷன் கார்டு விண்ணப்பம், ஓய்வூதியம், பட்டா விண்ணப்பம் உள்ளிட்ட பல திட்டங்களுக்கு மனு கொடுக்கலாம்.

 

6/10

மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக கொடுக்கப்படும் இந்த மனுக்கள் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும், துறைக்கும் அனுப்பி வைக்கப்படும்.

 

7/10

அப்போது, அவசர தேவைக்காக ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பிப்பவர்கள் இருப்பின் அவர்களுக்கு உடனடியாக கார்டுக்கு ஒப்புதல் கொடுக்கவும் ஆட்சியர் உத்தரவிடுவார்.

 

8/10

இதனால், தேவைபடுபவர்களுக்கு ஒரே நாளில் ரேஷன் கார்டு கிடைக்கும். இதுதவிர, மாதந்தோறும் நடக்கும் பொதுவிநியோக திட்ட குறைதீர்வு முகாம்களுக்கு நேரடியாக சென்று மனு கொடுத்தாலும் ஒரே நாளில் ரேஷன் கார்டு கிடைக்க வாய்ப்புள்ளது.

 

9/10

உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில்கூட பலருக்கு ஒரே நாளில் ரேஷன் கார்டு, ஓய்வூதியம் விண்ணப்பங்களுக்கு ஒப்புதல், பட்டா பிரச்சனைகளுக்கு தீர்வு உள்ளிட்டவை செய்து கொடுக்கப்பட்டிருக்கின்றன.

 

10/10

அதனால், அவசர தேவை இருப்பவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள். ரேஷன் கார்டுக்கு மட்டுமல்ல, மற்ற அரசு துறை சார்ந்த நலத்திட்ட உதவிகள், கோரிக்கைகள் இருப்பினும் இந்த முகாம்களில் மனு கொடுத்தால் சீக்கிரம் தீர்வு கிடைக்கும்.