பெண்களே! ஒருவரே ரூ.2000 வாங்கலாம் - மகளிர் உரிமைத் தொகை, புதுமைப் பெண் திட்டம் அப்டேட்

Published: Sep 26, 2025, 05:10 PM IST|Updated: Sep 26, 2025, 05:10 PM IST

பெண்களே, மகளிர் உரிமைத் தொகை, புதுமைப் பெண் திட்டங்களில் ரூ.2000 வாங்கலாம். முழு விவரம்

 

மகளிர் உரிமைத் தொகை, புதுமைப் பெண் இரண்டிலும் ரூ.2000 வாங்குவது எப்படி என தெரிந்து கொள்ளுங்கள்.

 

1/10

பெண்களின் வாழ்க்கையை முன்னேற்ற தமிழ்நாடு அரசு பல திட்டங்களை செயல்படுத்துகிறது. அன்புகரங்கள், புதுமைப் பெண் திட்டம் (Pudhumai Penn Scheme), கலைஞர் மகளிர் உரிமைத் தொகை (Kalaignar Magalir Urimai Thogai), விடியல் பயணம் என இந்த மகத்தான திட்டங்களின் பட்டியல் நீள்கிறது.

2/10

இந்த திட்டங்களை எல்லோரும் அறிந்திருப்பீர்கள். ஏன்? ஏதாவது இரு திட்டங்களில் தினமும் பயனடைந்து கொண்டும் இருப்பீர்கள். ஆனால், பெண்கள் பலரும் அறிந்திராத ஒரு தகவலை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

 

3/10

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயனாளியாக இருக்கும் பெண்களுக்கு அரசு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் கொடுக்கிறது.

 

4/10

கல்லூரிகளில் படிக்கும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் கொடுக்கிறது. ஆனால், இந்த இரண்டு திட்டங்களிலும் ஒரே நேரத்தில் பயனாளியாக இருக்க முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா?. அதனால், மாதந்தோறும் ரூ.2000 பெற முடியும்.

 

5/10

படித்த பெண்களாக இருந்து திருமணமாகி படிப்பை தொடர முடியாமல் இருந்தால், நீங்கள் உடனே கல்லூரிகளில் ஏதாவதொரு டிகிரியில், அதாவது உங்களுக்கு விருப்பமான டிகிரியில் மீண்டும் கல்வியை தொடருங்கள்.

 

6/10

இதன் மூலம் புதுமைப் பெண் திட்டத்தில் நீங்கள் பயனாளியாக முடியும். உங்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கட்டாயம் கிடைக்கும். அதேபோல், குடும்ப தலைவி என்ற முறையில் தகுதிகள் இருப்பின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கும் விண்ணப்பிக்கவும்.

 

7/10

இந்த இரு திட்டங்களிலும் ஒரே நேரத்தில் பயனாளியாக இருக்கலாம். இதற்கு எந்த நிபந்தனைகளும் இல்லை. 

 

8/10

தமிழ்நாடு அரசு சென்னையில் நடத்திய கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சியில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை மற்றும் புதுமைப் பெண் திட்டங்களில் பயனாளியாக இருந்த குடும்ப தலைவி கலந்து கொண்டு தான் இரு திட்டங்களிலும் பயனாளியாக இருப்பதை பெருமையுடன் தெரிவித்தார்.

 

9/10

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உள்ளிட்டோர் முன்னிலையில் அப்பெண் இந்த தகவலை தெரிவிக்கும்போது, முதலமைச்சரே மகிழ்ச்சியடைந்தார்.

 

10/10

கூடுதலாக தகவல் என்ன என்றால், அந்த பெண், தன் மகனுடன் இணைந்து ஒரே கல்லூரியில் ஒரே வகுப்பில் படிக்கிறார் என்பது தான். எனவே, அரசு கொடுக்கும் இந்த வாய்ப்புகளை படித்த பெண்கள் பயன்படுத்திக் கொள்ளவும். மாதம் ரூ.2000 பெற்றுக் கொள்ளவும்