ரேஷன் கார்டு இல்லாதவர்களுக்கு குட் நியூஸ்! நீங்களும் பொங்கல் பரிசு வாங்கலாம் - எப்படி தெரியுமா?

Published: Oct 05, 2025, 08:36 PM IST|Updated: Oct 05, 2025, 09:01 PM IST

Ration card : ரேஷன் கார்டு இல்லாதவர்கள் பொங்கல் பரிசு பெறுவது எப்படி? என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்

 

Ration card, Pongal Gift : தமிழ்நாடு அரசு ரேஷன் கார்டு இல்லாதவர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்குகிறது. எப்படி வாங்குவது என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்

1/8

தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் விழா தை 1 ஆம் தேதி வெகு சிறப்பாக கொண்டாடப்படும். இப்பெருமை மிகு பண்டிகையை உலகம் முழுவதும் இருக்கும் தமிழர்களும் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் கொண்டாடுவார்கள்

 

2/8

அப்படியான இந்த மகிழ்ச்சியான பண்டிகையை தமிழ்நாட்டில் வசிக்கும் எல்லோரும் எந்தவிதமான பண நெருக்கடியும் இல்லாமல் கொண்டாட வேண்டும் என்பதற்காக தமிழ்நாடு அரசு ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைவருக்கும் ஆண்டுதோறும் முன்கூட்டியே பொங்கல் பரிசு தொகுப்பு (Pongal Gift) இலவசமாக வழங்கும்

 

3/8

பச்சரிசி, கரும்பு, வெல்லம் உள்ளிட்ட பொருட்கள் இந்த இலவச பரிசுத் தொகுப்பில் இருக்கும். கூடவே, 1000 ரூபாய் ரொக்கப் பணமும் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு கொடுக்கும். இதனால் ஏழை எளிய மக்களும் மகிழ்ச்சியுடன் பொங்கல் விழாவை கொண்டாடுவார்கள்.

 

4/8

அதேநேரத்தில், ரேஷன் கார்டு (Ration card) இல்லாதவர்கள் தங்களுக்கு தமிழ்நாடு அரசின் பொங்கல் பரிசு இல்லையே என்ற வருத்தத்தில் இருப்பார்கள். அவர்களுக்கும் அரசு ஒரு சிறப்பு பொங்கல் தொகுப்பு இருக்கிறது. ஆனால், இலவசம் இல்லை. பணம் கொடுத்து வாங்க வேண்டும்.

 

5/8

அதாவது, கூட்டுறவுத்துறை விற்பனை செய்யும் இந்த பொங்கல் பரிசு தொகுப்பை யார் வேண்டுமானாலும் பணம் கொடுத்து வாங்கிக் கொள்ளலாம்.  விரைவில் இந்தாண்டுக்கான விற்பனை குறித்த அறிவிப்பு வெளியாக உள்ளது. கூட்டுறவுத்துறை மூலம் மூன்று விதமான கூட்டுறவு சிறப்பு பொங்கல் தொகுப்பு விற்பனை செய்யப்படும்.

 

6/8

மூன்று விதமான காம்போக்களில் விற்பனை செய்யப்படும் இந்த பரிசுத்தொகுப்பில் பச்சரிசி, வெல்லம், மஞ்சள் தூள், முந்திரி, ஏலக்காய், கடலை எண்ணெய், சீரகம், மிளகு, திராட்சை, ஆவின் நெய் உள்ளிட்ட பொருட்கள்  இருக்கும். நீங்கள் தேர்வு செய்யும் தொகுப்புக்கு ஏற்ப பொருட்களும், அவற்றின் விலையும் மாறும்.

 

7/8

இந்த சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு விற்பனை கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலைகள். பிரதம கூட்டுறவு பண்டகசாலைகள், கூட்டுறவு விற்பனைச் சங்கம், சுயசேவை பிரிவுகள் மற்றும் சில்லறை விற்பனை நிலையங்கள் ஆகிய இடங்களில் நடக்கும்.

 

8/8

மார்க்கெட் விலையை விட இந்த பொங்கல் பரிசு தொகுப்பு விலை குறைவாகவே இருக்கும். எனவே, ரேஷன் கார்டு இல்லாதவர்கள் மலிவு விலையில் இந்த பொங்கல் பரிசுத் தொகுப்பை வாங்கிக் கொள்ளலாம். தயாராக இருக்கவும்.