Ration Card : புதிய ரேஷன் கார்டு, வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித் தொகை ஒரே நாளில் கிடைக்க வழி உள்ளது. முழு விவரம்
Ration Card : புதிய ரேஷன் கார்டு, வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித் தொகை ஒரே நாளில் கிடைக்க என்ன செய்ய வேண்டும் என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
1/9தமிழ்நாட்டு பொதுமக்கள் பலர் புதிய ரேஷன் கார்டு (Ration Card), வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித் தொகை உள்ளிட்டவைகளை உடனடியாக பெறுவது எப்படி? என தேடிக் கொண்டிருக்கிறார்கள்.
2/9அதற்காக பல வழிகளிலும் முயற்சிக்கிறார்கள். குறிப்பாக, ஆன்லைனில் விண்ணப்பிப்பது, உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் மனு கொடுப்பது, தாலுகா அலுவலகத்துக்கு நேரில் சென்று விண்ணப்பிப்பது என தங்களுக்கு இருக்கும் வாய்ப்புகளில் எல்லாம் முறையிடுகின்றனர்.
3/9உண்மையில் சொல்ல வேண்டும் என்றால் மேலே சொல்லப்பட்டவை எல்லாமே சரியான வழிதான். இந்த வழிகளில் தான் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க வேண்டும். முதியோர் உதவித் தொகை மற்றும் பட்டா கேட்டு விண்ணப்பமும் தாலுகா அலுவலகத்தில் தான் கொடுக்க வேண்டும்.
4/9இதை தவிர்த்து வேறு வழி இருக்கிறதா? என்று கேட்டால், ஆம் இருக்கிறது. இந்த வழியில் முயற்சித்தால் உங்களுக்கான கோரிக்கைகள் உடனடியாக நிறைவேறவும் வாய்ப்பு இருக்கிறது.
5/9அது என்ன வழி? என கேட்கிறீர்களா... அதுதான் வாரந்தோறும் ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் நடக்கும் மக்கள் குறைதீர்வு நாள் முகாம். இந்த முகாமில் கலந்து கொண்டு மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக மனு கொடுப்பவர்களுக்கு உடனடியாக தீர்வு கிடைக்கும்.
6/9மாவட்டம் தோறும் திங்கட்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் மக்கள் குறைத்தீர்க்கும் நாள் முகாம் நடக்கும். இதில் பொதுமக்களின் குறைகள் மற்றும் மனுக்களை மாவட்ட ஆட்சியரே நேரடியாக பெற்றுக் கொள்வார்.
7/9அத்துடன், அந்தமனுக்கள் உரியதுறைக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். அப்படி எடுக்கவில்லை என்றால் அடுத்த வாரம் இதே குறைதீர்க்கும் முகாமில் கலந்து கொண்டு தங்களின் கோரிக்கை குறித்து கொடுக்கப்பட்ட மனுக்களின் நிலையை அறிந்து கொள்ளலாம்.
8/9இந்த மக்கள் குறைத்தீர்க்கும் முகாமில் புதிய ரேஷன் கார்டு, வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கலாம். புகார்கள் ஏதேனுமிருப்பின் அதனையும் நேரடியாக தெரிவிக்கலாம்.
9/9உங்களுக்கான கோரிக்கள் குறித்து உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, புதிய ரேஷன் கார்டு, வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித் தொகை கோரிக்கைகள் தவிர வேறு கோரிகள் இருந்து நீண்ட நாட்கள் காத்திருப்பவர்கள் இந்த வழியில் தங்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு தேடிக் கொள்ளலாம்.