Ration Card : வீடு இல்லாதவர்கள் ரேஷன் கார்டு பெறுவது எப்படி என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
1/10தமிழ்நாட்டில் வீடு இல்லாதவர்களும் ரேஷன் கார்டு பெற்றுக் கொள்ள முடியும். ஆம், நகர்புறங்களில் சாலையோரங்களில் வசிப்பவர்களுக்கு இந்த வாய்ப்பை அரசு வழங்குகிறது.
2/10நகர்புறங்களில் வீடற்ற ஏழ்மையான குடும்பங்களை பாதுகாக்கும் நோக்கில் அரசு அவர்களுக்கும் ரேஷன் கார்டு கொடுத்து அதன் மூலம் அத்தியாவசிய பொருட்களை பெற்றுக் கொள்ள வழிவகை செய்கிறது.
3/10இவர்களுக்கு ரேஷன் கார்டு கொடுக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு பிரத்யேகமாக வழிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றின் அடிப்படையிலேயே புதிய ரேஷன் கார்டு இவர்களுக்கு கொடுக்கப்படும்.
4/10இதற்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், தாலுகா அலுவலகங்களில் மனு கொடுக்கலாம். அப்படி மனு கொடுப்பவர்கள் இப்போது வசிக்கும் சாலையோரத்தில் அருகில் இருக்கும் வீட்டு முகவரியின் அடிப்படையில் ரேஷன் கார்டு கொடுக்கப்படும்.
5/10இதேபோல், சொந்த வீடு இல்லாமல் இருப்பவர்கள் வாடகை வீட்டில் குடியேறி கூட ரேஷன் கார்டு பெற்றுக்கொள்ள முடியும். அவர்களிடம் ஆதார் கார்டு உள்ளிட்ட ஏதேனும் ஒரு ஆவணம் கட்டாயம் இருக்க வேண்டும்.
6/10அதனடிப்படையில் வாடகை வீட்டு உரிமையாளரிடம் வாடகை ஒப்பந்தம் செய்து அந்த ஆவணத்தை கொடுத்து புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம்.
7/10ஒருவேளை அந்த முகவரியில் இருந்து நீங்கள் காலிசெய்ய நேர்ந்தால் புதிய முகவரிக்கான சான்றுகளை ஆன்லைனில் சமர்பித்து முகவரியை மாற்றிக் கொள்ளலாம்.
8/10மேலும், மாந்தோறும் நடக்கும் பொதுவிநியோக திட்ட குறைதீர்ப்பு முகாம்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் நடக்கும் குறைதீர்வு முகாம்களில் கலந்து கொண்டு ரேஷன் கார்டு முகவரி மாற்றுவதில் இருக்கும் சிக்கல்களுக்கு தீர்வு காணலாம்.
9/10தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ரேஷன் கார்டு பெறுவது எளிதான விஷயமாக இருந்தாலும், உரிய ஆவணங்கள் இல்லையென்றால், புதிய ரேஷன் கார்டு கட்டாயம் பெற முடியாது.
10/10மோசடி ஆவணங்களை சமர்பித்து புதிய ரேஷன் கார்டு பெற்றாலும், கள ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டு சட்டப்பூர்வ நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும்.