சென்னையில் விருப்பம்போல் பயணம் செய்யும் மாதாந்திர பயண அட்டை பெறுவது எப்படி?

Chennai bus pass : சென்னை மாநகர பேருந்துகளில் விருப்பம் போல் பயணம் செய்யும் புதிய மாதாந்திர பயண அட்டை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Chennai MTC bus pass : சென்னையில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் மாநகர பேருந்து பயணத்துக்கான புதிய மாதாந்திர பயண அட்டையின் பலன்கள் என்ன? அதனை எங்கு பெறுவது என்பது உள்ளிட்ட தகவல்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

1 /7

சென்னை, மாநகர் போக்குவரத்துக் கழகம் சார்பில் புதிய மாதாந்திர பேருந்து பயண அட்டை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் சிவசங்கர் அந்த மாதாந்திர பயண அட்டையை அறிமுகம் செய்து வைத்தார். 

2 /7

சென்னை மாநகர் பயணிகளின் வசதிக்காக இந்த புதிய மாதாந்திர பயண அட்டை அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த அட்டை வைத்திருப்பவர்கள் குளிர்சாதன பேருந்து உட்பட அனைத்து பேருந்துகளிலும் பயணம் செய்ய முடியும்.

3 /7

அதாவது குளிர்சாதன பேருந்துகளிலும் ஏறி பயணிக்கலாம். எப்போது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் ஏறி இறங்கிக் கொள்ள முடியும். கணக்கற்ற முறையில் பயணிகள் இந்த புதிய மாதாந்திர பயண அட்டையை வைத்துக் கொண்டு பயணிக்க முடியும்

4 /7

விருப்பம்போல் பயணம் செய்யும் (TAYPT) மாதாந்திர பயண அட்டை கட்டணமாக ரூ.2000/- நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்னை, மாநகர் போக்குவரத்துக் கழகத்தில், குளிர்சாதன பேருந்து உட்பட அனைத்து பேருந்துகளிலும் விருப்பம்போல் பயணம் செய்யலாம்.  

5 /7

அதேபோல், ஏற்கனவே நடைமுறையில் உள்ள, ரூ.1000 மதிப்பிலான விருப்பம்போல் பயணம் செய்யும் மாதாந்திர சலுகைப் பயண (குளிர்சாதன பேருந்து நீங்களாக) அட்டையையும் பயணிகள் பெற்றுக் கொள்ளலாம்.

6 /7

ஆயிரம் ரூபாய் பாஸ் எடுத்தால் ஏசி பேருந்துகளில் பயணிக்க முடியாது. இப்போது அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் பாஸை எடுத்தால் ஏசி பேருந்துகளிலும் பயணிக்கலாம். சென்னை வாசிகளின் பேருந்து கால நேர மிச்சமாகும். இல்லையென்றால் ஏசி பேருந்து வரும்போது ஏற முடியாமல், மற்ற பேருந்துகள் வரும் வரை காத்திருக்க வேண்டும்.

7 /7

MTC மாதாந்திர சலுகைப் பயணச்சீட்டு விற்பனை மையங்கள் : அடையாறு, அம்பத்தூர் தொழிற்பேட்டை, பல்லாவரம், பெரம்பூர், அம்பத்தூர் ஓ.டி., பூந்தமல்லி, அண்ணா நகர் (மேற்கு), செங்குன்றம், சைதாப்பேட்டை, ஆவடி, அயனாவரம், பிராட்வே, கோயம்பேடு, 'சென்ட்ரல் ரயில் நிலையம், கிண்டி தொழிற்பேட்டை, ஐயப்பன்தாங்கல், கிளாம்பாக்கம், ஸ்ரீபெரும்புதூர், தி. நகர், தாம்பரம் (மேற்கு), திருவான்மியூர், திருவொற்றியூர், கே.கே. நகர், எம்.கே.பி. நகர், மந்தவெளி, தண்டையார்பேட்டை, வடபழனி வள்ளலார் நகர் (மின்ட்), வேளச்சேரி, ஐ.சி.எப்.