பட்டாவில் இறந்தவர்கள் பெயரை நீக்கி, வாரிசுகள் பெயரை சேர்ப்பது எப்படி? - தமிழ்நாடு அரசு அறிவிப்பு

Tamil Nadu Govt : பட்டாவில் இறந்தவர்கள் பெயரை நீக்கி, வாரிசுகள் பெயரை சேர்ப்பது குறித்து தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Tamil Nadu Govt Announcement : தமிழ்நாட்டில் நில உடைமைதாரர்களுக்கு பட்டாவில் பெயர் மாற்றுவது குறித்து தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அது குறித்த முழு விவரத்தை இங்கே தெரிந்து கொள்ளலாம்.

1 /9

Tamil Nadu Govt Announcement : தமிழ்நாடு அரசு ரேஷன் கார்டு உள்ளிட்ட பொதுமக்களுக்கு அத்தியாவசியமாக தேவைப்படும் அனைத்து சேவைகளையும் டிஜிட்டல் மயமாக்கி வருகிறது. அந்தவகையில் பட்டாவில் பெயர் மாற்றம் மற்றும் பெயர் சேர்த்தல் ஆகியவற்றையும் ஆன்லைன் படுத்தியுள்ளது.

2 /9

பட்டாவில் பெயர் நீக்கல், சேர்த்தல் ஆகியவற்றை நில உடமைதாரர்கள் உரிய ஆவணங்களுடன் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது. இதற்காக மணிக்கணக்கில் தாலுகா அலுவலகத்துக்கு சென்று காத்திருக்க வேண்டியதில்லை.   

3 /9

இது தொடர்பாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் இப்போது ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். பட்டாவில் இறந்தவர்கள் பெயரை நீக்கி, வாரிசுகள் பெயரை சேர்க்க ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். 

4 /9

அவர் வெளியிட்டிருக்கும் அந்த அறிவிப்பில், பட்டாவிலுள்ள இறந்த நில உடமைதாரர்களின் பெயர்களை நீக்கி, அவர்களது வாரிசுதாரர்கள் அல்லது பதிவு செய்யப்பட்ட ஆவணம் வாயிலாக உரிமை பெற்றவர்களின் பெயர்களை சேர்க்க உரிய ஆவணங்களுடன் இ-சேவை மையங்கள் அல்லது Citizen Portal வாயிலாக விண்ணப்பிக்கலாம் என கூறியுள்ளார்.

5 /9

தமிழ்நாடு முழுவதுமுள்ள கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள நிலங்களில் நில ஆவணங்கள் கணினி மயமாக்கப்பட்டு இணைய வழியில் பொதுமக்கள் அனைவரும் எளிதில் பார்வையிடும் வகையிலும், அச்சிட்டு பயன்படுத்தும் வகையிலும் https://eservices.tn.gov.in/ என்ற இணையதளத்தின் வாயிலாக பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டன. 

6 /9

இருப்பினும் பல சிட்டாவிலுள்ள பட்டாதாரர்களுக்கு இறந்தவர்களின் பெயர்கள் நீக்கப்படாமலும் அவர்களின் பெயர்களுக்கு பதிலாக வாரிசுதாரர்களின் பெயர்கள் சேர்க்கப்படாமலும் உள்ளன.

7 /9

எனவே, பட்டாவிலுள்ள இறந்த நில உடமைதாரர்களின் பெயர்களை நீக்கி, அவர்களது வாரிசுதாரர்கள் அல்லது பதிவு செய்யப்பட்ட ஆவணம் வாயிலாக உரிமை பெற்றவர்களின் பெயர்களை சேர்க்க பொதுமக்கள் உரிய ஆவணங்களுடன் இ-சேவை மையங்களின் வாயிலாகவோ அல்லது Citizen Portal வாயிலாகவோ விண்ணப்பிக்கலாம்.

8 /9

மேற்படி விண்ணப்பங்கள, ஆவணங்களின் அடிப்படையில் எதிர்வரும் காலங்களில் பரிசீலனை செய்யப்பட்டு, பட்டாதாரர்கள் பெயர் மாற்றம் தொடர்பாக உரிய ஆவணங்கள் பிறப்பிக்கப்பட்டு நில ஆவணங்களில் உரிய மாற்றங்கள் செய்யப்படும், என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

9 /9

இதேபோல் மற்ற மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் பட்டாவில் பெயர் மாற்றம் செய்ய வேண்டியிருந்தால் இந்த ஆன்லைன் போர்ட்டல் மூலம் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கவும். தமிழ்நாடு அரசு வழிவகை செய்திருக்கும் இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ளுமாறும் பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.