How To Clean Face With Aloe Vera: முகத்தை சுத்தம் செய்ய கற்றாழையைப் பயன்படுத்தலாம். ஏனெனில் கற்றாழை சருமத்தை ஆழமாக சுத்தம் செய்ய உதவுகிறது.
நாம் அனைவரும் நமது முகத்தை கழுவ பல ஃபேஸ் வாஷ்களை பயன்படுத்தி வருகிறோம். இது தவிர, சிலர் முகத்தை சுத்தம் செய்ய க்ளென்சரையும் பயன்படுத்துகின்றனர். ஆனால், ஃபேஸ் வாஷ் மற்றும் கிளென்சரில் பல வகையான ரசாயன பொருட்கள் உள்ளன என்று உங்களுக்கு தெரியுமா? ஆம், இதற்கு தீர்வு தரும் வகையில் இன்று நாம் சில குறிப்புகளை பற்றி காணப் போகிறோம்.
தற்போது முகத்தை சுத்தம் செய்ய பலர் வீட்டு வைத்தியத்தை பயன்படுத்தி வருகின்றனர். இதற்கு கற்றாழை ஃபேஸ்வாஷ் மிகவும் சரியான தேர்வாகும். ஏனெனில் முகத்தை சுத்தம் செய்ய கற்றாழை மிகவும் நல்லது. வறண்ட மற்றும் உயிரற்ற சருமத்திலிருந்து பாதுகாக்க கற்றாழை உதவும். இது சருமத்தை மென்மையாகவும் மிருதுவாகவும் ஆக்கும்.
கற்றாழை சருமத்தை ஆழமாக சுத்தப்படுத்த உதவுகிறது. கற்றாழையால் முகத்தைக் கழுவினால், சருத்தில் இருக்கும் முகப்பருக்கள் நீக்கும். மேலும் சுருக்கங்கள் நீங்கி, சருமத்தை இளமையாகவும் அழகாகவும் மாற்ற உதவும். இப்போது இதை எப்படி பயன்படுத்துவது என்று பார்ப்போம்.
கற்றாழை மற்றும் ரோஸ் வாட்டரை கலந்து முகத்தை சுத்தம் செய்யலாம். இதற்கு ஒரு ஸ்பூன் ரோஸ் வாட்டரை 2 ஸ்பூன் கற்றாழை ஜெல்லில் கலந்து, இதை முகத்தில் தடவி மசாஜ் செய்யவும். 5-6 நிமிடங்களுக்குப் பிறகு, முகத்தை சாதாரண நீரில் கழுவவும்.
கற்றாழையுடன் பச்சைப் பால் கலந்து முகத்தை சுத்தம் செய்யலாம். இதற்கு, இரண்டு ஸ்பூன் கற்றாழை ஜெல்லில் பச்சைப் பாலை கலக்கவும். அதை முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து முகத்தைக் கழுவவும்.
கற்றாழை மற்றும் வைட்டமின் ஈ எண்ணெய் கலந்து முகத்தை கழுவலாம். இதற்கு 2 டீஸ்பூன் கற்றாழை ஜெல்லில் 3-4 சொட்டு வைட்டமின் ஈ எண்ணெயைக் கலந்து முகத்தில் தடவி 10 நிமிடங்களுக்குப் பிறகு முகத்தை கழுவவும்.
முகத்தை சுத்தம் செய்வதற்கு கற்றாழை மற்றும் தேன் பயன்படுத்தலாம். இதற்கு 2 டீஸ்பூன் கற்றாழை ஜெல்லில் ஒரு டீஸ்பூன் தேனை கலக்கவும். அதை முகத்தில் தடவி மெதுவாக மசாஜ் செய்து முகத்தை கழுவவும்.
முகத்தில் புள்ளிகள் நீங்க கற்றாழையில் எலுமிச்சை சாறு கலந்து தடவலாம். இதற்கு 2 டீஸ்பூன் கற்றாழை ஜெல்லில் 3-4 சொட்டு எலுமிச்சை சாற்றைக் கலக்கவும். அதை முகத்தில் தடவி 3-4 நிமிடங்களுக்குப் பிறகு கழுவவும்.
பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.