பெண்கள் ரூ. 1 லட்சம் மானிய விலையில் ஆட்டோ வாங்க விண்ணபிப்பது எப்படி? - முக்கிய அப்டேட்

Published: Jul 24, 2025, 07:43 PM IST|Updated: Jul 24, 2025, 07:46 PM IST

Tamil Nadu auto subsidy for women ; பெண்கள் ஆட்டோ வாங்க ரூ. 1 லட்சம் பெறுவது எப்படி? என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

1/8

Tamil Nadu auto subsidy for women ; பெண்கள் முன்னேற்றத்துக்காக கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, விடியல் பயணம் உள்ளிட்ட பல திட்டங்களை செயல்படுத்தி வரும் தமிழ்நாடு அரசு, பெண் ஓட்டுநர்களை ஊக்குவிக்கும் பொருட்டு அவர்கள் ஆட்டோ வாங்க ரூ.1 லட்சம் மானியம் கொடுக்கிறது.

2/8

பெண்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறையின் மூலம் ஓட்டுநர் தொழிலில் ஈடுபட்டுள்ள பெண் தொழிலாளர்களை ஊக்குவிக்கும் முக்கிய திட்டமாக இது உள்ளது.

3/8

தமிழ்நாடு அமைப்புச்சாரா ஓட்டுநர் மற்றும் தானியங்கி மோட்டார் பழுதுபார்க்கும் தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள பெண் உறுப்பினர்கள் மானிய விலை ஆட்டோ திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம். 

4/8

சொந்தமாக இலகுரக மற்றும் கனரக வாகனம் வைத்திருக்காத திருநங்கைகள் மற்றும், பெண் ஓட்டுநர்களுக்கு மட்டும் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் ஆட்டோ அல்லது டாக்சி என ஏதேனும் ஒரு வாகனத்தை மட்டும் வாங்க அனுமதிக்கப்படுவார்கள்.

 

5/8

இத்திட்டத்தின் கீழ் பெரம்பலூர் மாவட்டத்தில் முதல்முறையாக திருமாந்துறையை சேர்ந்த திருமதி நந்தினி என்பவருக்கும், நொச்சிக்குளத்தைச் சேர்ந்த திருமதி ரம்யா என்பவருக்கும் தலா ரூ. 1 லட்சம் மானிய உதவியுடன் ஆட்டோக்கள் வழங்கப்பட்டுள்ளன.

 

6/8

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் மக்கள் நலத்திட்டங்களில் பயன்பெற விரும்பும் நபர்கள் https://tnuwwb.tn.gov.in என்ற இணையவழியில் விண்ணப்பித்து பயனடையலாம். 

7/8

மேலும், இதுவரை மேற்படி நலவாரியத்தில் பதிவு செய்யாத ஓட்டுநர்கள் புதிதாக பதிவு செய்து, திருமணம், மகப்பேறு, கண் கண்ணாடி, ஓய்வூதியம், இயற்கை மரணம் விபத்து மரணம் மற்றும் தங்களது குழந்தைகளுக்கு கல்வி மற்றும் திருமண உதவித் தொகை ஆகிய நலத்திட்ட உதவிகளையும் பெறலாம்.

8/8

பெண் ஓட்டுநர்கள் தமிழ்நாடு அமைப்புச்சாரா ஓட்டுநர் மற்றும் தானியங்கி மோட்டார் பழுதுபார்க்கும் தொழிலாளர்கள் நலவாரியத்தில் அதிக அளவில் பதிவு செய்து பயனடையுமாறு அரசு கேட்டுக்கொண்டுள்ளது.