மகளிர் உலகக் கோப்பை: வெற்றி பெறும் அணிக்கு இத்தனை கோடி பரிசா...! ஆண்கள் தொடரை விட அதிகம்!

Written BySudharsan G
Published: Nov 02, 2025, 06:35 PM IST|Updated: Nov 02, 2025, 06:35 PM IST

ICC Women's World Cup Prize Amount: மகளிர் உலகக் கோப்பை 2025 தொடரில் சாம்பியன் பட்டத்தை வெல்லும் அணிக்கு எவ்வளவு பரிசுத்தொகை வழங்கப்படும் என்பதை இங்கு விரிவாக காணலாம்.

கடந்த 2022 ஐசிசி மகளிர் உலகக் கோப்பையின் பரிசுத்தொகை மற்றும் தற்போதைய மகளிர் உலகக் கோப்பையின் பரிசுத்தொகையையும் இங்கு ஒப்பீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், நடப்பு மகளிர் உலகக் கோப்பையில் வழங்கப்படும் ஒட்டுமொத்த பரிசுத்தொகை, 2023 ஐசிசி ஆடவர் உலகக் கோப்பையில் வழங்கப்பட்ட பரிசுத்தொகையை விட அதிகமாகும்.

ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 20251/8

ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2025

ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2025 தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் இன்று (நவ. 2) மோதுகின்றன. நவி மும்பையில் உள்ள டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் இப்போட்டி நடைபெறுகிறது.

ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 20252/8

ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2025

போட்டி 3 மணிக்கு தொடங்க வேண்டும். ஆனால், மைதானம் ஈரப்பதத்துடன் காணப்படுவதால் இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் ஐசிசி மகளிர் உலகக் கோப்பையின் இறுதிப்போட்டி சற்று தாமதமாக தொடங்கியது. 

ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 20253/8

ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2025

மாலை 4.32 மணிக்கு டாஸ் வீசப்பட்டு, மாலை 5 மணிக்கு போட்டி தொடங்கியது. மேலும், ஓவர்கள் குறைக்கப்படவில்லை. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா பந்துவீச்சை தேர்வு செய்தது. இரு அணிகளும் தங்களின் பிளேயிங் லெவனை மாற்றவில்லை. சுமார் 2 மணிநேரம் தாமதமாக தொடங்கியதால் நள்ளிரவு வரை ஆட்டம் நடைபெறும் எனலாம். 

ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 20254/8

ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2025

இந்தச் சூழலில், ஐசிசி மகளிர் உலகக் கோப்பையை வெல்லும் அணிக்கு எவ்வளவு பரிசு கொடுக்கப்படும் என்பதை இங்கு காணலாம். அதற்கு முன் கடந்த 2022 ஐசிசி மகளிர் உலகக் கோப்பையில் வழங்கப்பட்ட பரிசுத்தொகை எவ்வளவு?, இந்தாண்டு மற்ற அணிகளுக்கு கொடுக்கப்பட்ட பரிசுத்தொகை எவ்வளவு? என்பதையும் இங்கு விரிவாக காணலாம். 

ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 20255/8

ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2025

இந்த முறை கலந்துகொண்ட 8 அணிகளுக்கும் இந்திய மதிப்பில் தலா ரூ.2 கோடி வழங்கப்படுகிறது. 5வது மற்றும் 6வது இடத்தில் நிறைவு செய்யும் அணிக்கு தலா ரூ.5.2 கோடியும், 7வது மற்றும் 8வது இடத்தில் நிறைவு செய்யும் அணிகளுக்கு தலா ரூ.2.3 கோடியும் வழங்கப்படுகிறது. குரூப் போட்டியில் வெல்லும் ஒவ்வொரு போட்டிக்கும் ஒரு அணிக்கு ரூ.28 லட்சம் வழங்கப்படும்.

ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 20256/8

ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2025

கடந்த 2022 ஐசிசி மகளிர் உலகக் கோப்பையில் அனைத்து அணிகளுக்கும் சேர்த்து மொத்தமாக ரூ.29 கோடி மட்டுமே வழங்கப்பட்டது. ஆனால், இம்முறை அது மூன்று மடங்கிற்கு மேல் உயர்ந்து ரூ.116 கோடியாக உள்ளது. இத்தொகை 2023 ஐசிசி ஆடவர் உலகக் கோப்பையில் வழங்கப்பட்ட  பரிசுத்தொகையை விட அதிகமாகும். அத்தொடரில் மொத்தம் ரூ.84 கோடியே வழங்கப்பட்டது.  

 

ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 20257/8

ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2025

கடந்த 2022ஆம் ஆண்டு நடந்த ஐசிசி மகளிர் உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்ற ஆஸ்திரேலிய அணிக்கு இந்திய மதிப்பில் ரூ.11 கோடி வழங்கப்பட்டது. இறுதிப்போட்டியில் தோல்வியடைந்த இங்கிலாந்து அணிக்கு ரூ.5 கோடி வழங்கப்பட்டது. குறிப்பிடத்தக்கது. ஆனால், தற்போது அரையிறுதியில் தோல்வியடைந்த இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகளுக்கு தலா 9.3 கோடி வழங்கப்பட உள்ளது. கடந்த முறை அரையிறுதியில் தோல்வியடைந்தவர்களுக்கு ரூ.2.5 கோடி மட்டுமே வழங்கப்பட்டது. 

 

ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 20258/8

ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2025

தற்போது 2025 ஐசிசி மகளிர் உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டத்தை வெல்லும் அணிக்கு ரூ.37.3 கோடி வழங்கப்பட உள்ளது. 2வது இடத்தை பிடிக்கும் ரூ.20 கோடி வழங்கப்பட உள்ளது. அதாவது கடந்த 2022 மகளிர் உலகக் கோப்பையின் பரிசுத்தொகையை ஒப்பிடும்போது சாம்பியன் பட்டம் வென்றவருக்கு 239 சதவீதமும், இரண்டவாது இடம் பிடிக்கும் அணிக்கு 273 சதவீதமும் தற்போது பரிசுத்தொகை உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.