டி20 உலக கோப்பை : ரோகித் மனது வைத்தால் நடராஜனுக்கு இன்னும் வாய்ப்பு இருக்கு! எப்படி?

கேப்டன் ரோகித் சர்மா மனது வைத்தால் 20 ஓவர் உலக கோப்பைக்கான இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜனை சேர்க்க முடியும். அதற்கான வாய்ப்பு இன்னும் இருக்கிறது

1 /6

20 ஓவர் உலக கோப்பைக்கான இந்திய அணியில் தமிழக வீரர் ஒருவர் கூட இடம்பெறவில்லை. சாய் சுதர்சன் மற்றும் நடராஜன் ஆகியோருக்கு வாய்ப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.  

2 /6

ஏனென்றால், குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக சாய் சுதர்சன் சிறப்பாக ஆடிக் கொண்டிருக்கும் நிலையில், சன்ரைசர்ஸ் அணிக்காக ஐபிஎல் தொடரில் அபாரமாக பந்துவீசிக் கொண்டிருக்கிறார் நடராஜன்.  

3 /6

நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் நடராஜன் முதல் இடத்தில் இருக்கிறார். அவர் இதுவரை 15 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். நடராஜனுக்கு அடுத்த இடத்தில் ஜஸ்பிரித் பும்ரா 14 விக்கெட்டுகளுடன் இரண்டாம் இடத்தில் இருக்கிறார்.  

4 /6

ஆனால் நடராஜனை விட்டு அர்ஷ்தீப் சிங்கை பிசிசிஐ டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் எடுத்திருக்கிறது. அவர் 13 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்தாலும் அதிக ரன்களை விட்டுக் கொடுக்கும் பவுலராக இருக்கிறார். பவுலிங் பிட்சிலேயே அர்ஷ்தீப் பந்துகளை சரமாரியாக பேட்ஸ்மேன்கள் விளாசுகிறார்கள்.  

5 /6

நடராஜன் சிக்கனமாக பந்துவீசி அசத்துகிறார். சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் பேசும்போது, நடராஜன் யார்க்கர் சூப்பராக வீசுவதாக பாராட்டியுள்ளார். அவரை 20 ஓவர் உலக கோப்பைக்கான இந்திய அணியில் சேர்க்க வேண்டும் என பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.  

6 /6

மே 15 ஆம் தேதி வரை இப்போது அறிவிக்கப்பட்டிருக்கும் அணியில் ஏதேனும் மாற்றங்கள் செய்ய ஐசிசி அனுமதி அளித்திருக்கிறது. அதனால் இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் மற்றும் கேப்டன் ரோகித் சர்மா மனது வைத்தால் அர்ஷ்தீப் சிங்கிற்கு பதிலாக நடராஜனை 20 ஓவர் உலக கோப்பைக்கான இந்திய அணியில் சேர்க்கலாம். ஆனால் அது நடக்குமா? என்பது தான் கேள்விக்குறி