Bank Loans: வங்கியில் கடன் வாங்கியிருந்தவர் உயிரிழந்துவிட்டால், அவர் வாங்கிய கடனை யார் திருப்பிச் செலுத்த வேண்டும் என்பதை இங்கு அறிந்துகொள்ளலாம்.
1/8வங்கியில் இருந்து நீங்கள் வீட்டுக் கடன், கார் கடன், தனிநபர் கடன் ஆகியவற்றை வாங்குவது இப்போது பொதுவாகிவிட்டது. வெளியில் அதிக வட்டிக்கு கடன் வாங்குவதற்கு, தங்களுக்கு ஏற்ற வகையில் வங்கிகளில் கடன் வாங்கலாம்.
2/8ஆனால், வங்களில் கடன் வாங்குவதும் அவ்வளவு எளிதல்ல. உங்களது வருமானத்திற்கான ஆதாரம், உங்களின் கடந்த கால கடன் வரலாறு, கடன் திருப்பிச் செலுத்தும் திறன் ஆகியவற்றை கருத்தில் கொண்டே வங்கிகள் கடன்கள் வழங்கும்.
3/8அந்த வகையில், வங்கியில் இருந்து கடன் வாங்கியவர் ஒருவேளை உயிரிழந்துவிட்டால், அவர் வாங்கிய கடனை யார் திருப்பிச் செலுத்த வேண்டும்? குடும்ப உறுப்பினர்கள் அதை திருப்பிச் செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறார்களா? என்பதை இங்கு விரிவாக அறிந்துகொள்ளலாம்.
4/8கடன் வாங்கியவர் உயிரிழந்துவிட்டால், வங்கி அவரின் இணை விண்ணப்பதாரரை தொடர்புகொள்ளும். கல்விக் கடன், வீட்டுக் கடன், கூட்டுக் கடன் ஆகியவற்றில் இணை விண்ணப்பதாரரின் பெயரும் பதிவு செய்யப்பட்டிருக்கும். இணை விண்ணப்பதாரராலும் கடனை திருப்பிச் செலுத்த இயலாவிட்டால், உத்தரவாததாரரை வங்கி அடுத்து தொடர்புகொள்ளும்.
5/8உத்தரவாத தாரரும் பணத்தை செலுத்த மறுத்துவிட்டாலோ அவரிடம் பணம் இல்லாவிட்டாலோ, வங்கி உயிரிழந்தவரின் சட்டப்பூர்வ வாரிசை அணுகும். அதாவது, உயிரிழந்தவரின் கணவன்/மனைவி அல்லது குழந்தைகள் அல்லது பெற்றோர். கடனை திருப்பிச் செலுத்த இவர்கள் பொறுப்பேற்க வேண்டும் என கோரிக்கை விடுக்கும்.
6/8இணை விண்ணப்பதாரர், உத்தரவாதம் அளித்தவர், கடன் பெற்றவரின் வாரிசு ஆகியோர் யாராலும் கடனை திருப்பிச் செலுத்த இயலாவிட்டால், உயிரிழந்தவரின் சொத்தை முடக்கி, அதனை விற்பனை செய்யும் உரிமை வங்கிக்கு உள்ளது.
7/8வீட்டுக்கடன் வாங்கியிருந்தால் வீட்டை விற்றும், வாகன விருந்து வாங்கியிருந்தால் வாகனத்தை விற்றும், தனிநபர் கடன் வாங்கியிருந்தால் அந்த நபரின் சொத்தை ஏலம் விட்டும் அளித்த கடனை வசூல் செய்துவிடுவார்கள்.
8/8கடன் வாங்கியிருந்தவர் கடன் பாதுகாப்பு காப்பீடு வைத்திருந்தால், அவர் உயிரிழந்ததும் காப்பீட்டு நிறுவனமே கடனை திருப்பிச் செலுத்திவிடும், இதனால் குடும்பத்தினருக்கு சுமை இருக்காது. உயிரிழந்தவரின் சொத்தை அவரது வாரிசு ஏற்றுக்கொள்ளாவிட்டால், கடனை திருப்பிச் செலுத்த வேண்டாம். ஆனால், சொத்துக்களை ஏற்றுக்கொண்டால் கடனை திருப்பிச் செலுத்த வேண்டும்.