பெண் குழந்தை பெற்றுக்கொண்டால் ரூ.50000 பணம்! ஆண் குழந்தை பெற்றுக்கொண்டால் பசுமாடு!

Chandrababu Naidu News In Tamil: ஆந்திராவில் தெலுங்கு மக்கள் மூன்றாவதாக பெண் குழந்தை பெற்றுக்கொண்டால் 50000 ரூபாய் வழங்கப்படும். ஆண் குழந்தை பெற்றுக்கொண்டால் பசுமாடு வழங்கப்படும் என எம்பி காளிச்செட்டி அப்பளா நாயுடு அறிவிப்பு.

Andhra Pradesh Latest News In Tamil: ஆந்திராவில் இரண்டு பெண் குழந்தைகளைப் பெற்ற தம்பதியர் மூன்றாவது குழந்தை பெற்றால் பசுமாடு அல்லது ரூ.50,000 ரொக்கம் வழங்கப்படும் என அந்த மாநில ஆளுங்கட்சி எம்பியான காலிசெட்டி அப்பளா நாயிடு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஆந்திரா மாநில முதல்வராக இருக்கும் சந்திரபாபு நாயுடு, அதிக குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளும் குடும்பங்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்று மக்கள் மத்தியில் பேசி வருகிறார்.

1 /8

ஆந்திராவில் பெண்கள் கருவுறுதல் சதவீதம் குறைந்துள்ளதால் பெரும் கவலை அடைந்துள்ள அந்த மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெலுங்கு பேசும் மக்கள் அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்.

2 /8

கடந்த ஆண்டு ஒரு நிகழ்ச்சியில் பேசிய சந்திரபாபு நாயுடு, இனி இரண்டு அல்லது அதற்கு மேல் குழந்தைகளைப் பெற்றவர்கள் மட்டுமே உள்ளாட்சித் தேர்தல்களில் போட்டியிடும் வகையில் சட்ட திருத்தம் கொண்டுவரப்படும் என்றார். 

3 /8

இந்த நிலையில் மகளிர் தின நிகழ்ச்சியில் பேசிய ஆந்திரா மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, அரசு ஊழியர்கள் ஐந்து ஆறு குழந்தைகளைப் பெற்றாலும் அவர்களுக்கு ஆறு மாதங்கள் பேருகால விடுப்பு மற்றும் இதர சலுகைகள் வழங்கப்படும் என்று அறிவித்தார். அதாவது எத்தனை குழந்தை பெற்றுக் கொள்கிறீர்களோ, அத்தனை பிறப்புகளுக்கும் மகப்பேறு விடுப்பு விரிவுபடுத்தப்படும் எனக் கூறியுள்ளார்.

4 /8

ஆந்திராவில் ஒரு காலத்தில் குடும்ப கட்டுப்பாட்டை வலியுறுத்தி வந்த முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, தற்போது அங்கு பிறப்பு விகிதம் குறைந்துள்ளதால் பெரும் கவலை அடைந்துள்ளார். 

5 /8

32 எம்பி தொகுதிகளை பெற்றிருந்த ஒருங்கிணைந்த ஆந்திராவிலிருந்து தெலுங்கானா பிரிந்ததால் கடந்த 10 ஆண்டுகளாக ஆந்திராவின் பிரதிநிதித்துவம் 25 தொகுதிகளாக சுருங்கிவிட்டது. 

6 /8

பாஜக கூட்டணியில் உள்ள அவர் மக்கள் தொகைக்கும் தொகுதி சீரமைப்புக்கும் தொடர்பில்லை என்று பேசி வந்தாலும், தொகுதி மறு சீரமைப்பு போன்றவற்றையும் மனதில் வைத்து மக்கள் தொகையை ஊக்குவிக்கிறாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. 

7 /8

முதலமைச்சர் சந்திரபாபுவை தொடர்ந்து அவர் அவரது கட்சியைச் சேர்ந்த வைசியா நகரம் தொகுதி எம்பி காளிச்செட்டி அப்பளா நாயுடு மற்றொரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

8 /8

இரண்டு பெண் குழந்தைகளைப் பெற்ற தம்பதியர் மூன்றாவது பெண் குழந்தை பெற்றால் தனது செலவில் ரூ.50,000 ரொக்க பணம் வழங்கப்படும் என்று அவர் அறிவித்திருக்கிறார். மூன்றாவதாக ஆண் குழந்தை பெற்றால் பசுமாடு வழங்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.