PPF: மாதந்தோறும் இவ்வளவு முதலீடு செய்தால்.... 20 ஆண்டுகளில் ரூ.63 லட்சம் வரை திரட்டலாம்!

PPF: பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் 20 ஆண்டுகளுக்கு தொடர்ந்து, மாதந்தோறும் ரூ.4 ஆயிரம், ரூ.8 ஆயிரம், ரூ.12 ஆயிரம் என முதலீடு செய்தால் மொத்தம் எவ்வளவு தொகையை பெறுவீர்கள் என்பதை இங்கு காணலாம். 

Public Provident Fund: பொது வருங்கால வைப்பு நிதி திட்டம் என்பது நீண்ட கால முதலீட்டில் உங்களுக்கு சிறப்பான பலனை கொடுக்கிறது. இதில் உத்தரவாதமான வருமானம், வரி சலுகை உள்ளிட்டவையும் கிடைக்கும் என்பதால் பலரும் இதுகுறித்து அறிந்துகொள்ள விரும்புகிறார்கள்.

1 /9

பொது வருங்கால வைப்பு நிதி திட்டம் (Public Provident Fund) என்பது வங்கிகளில் மட்டுமின்றி அஞ்சல் அலுவலகங்களிலும் தொடங்கலாம். இது உங்களது எதிர்காலத்திற்கு உதவும் திட்டமாகும்.

2 /9

வேலை பார்ப்பவர்கள், சுய தொழில் செய்பவர்கள், ஓய்வூதியக்காரர்கள் என யார் வேண்டுமானாலும் பொது வைப்பு நிதி திட்டத்தில் முதலீடு செய்யலாம். 18 வயதை தாண்டியவர்கள் மட்டுமின்றி மைனர்களும் தங்களது பாதுகாவலர் மூலம் கணக்கை தொடங்கலாம்.  

3 /9

வங்கியிலோ அல்லது அஞ்சல் அலுவலகங்களிலோ கூட நீங்கள் பொது வருங்கால வைப்பு நிதி கணக்கை நாடு முழுவதும் எங்கு வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம். ஆனால், ஒரே ஒரு கணக்கை மட்டுமே வைத்துக்கொள்ள இயலும்.  

4 /9

ஒரு வருடத்தில் குறைந்தபட்சம் ரூ.500 முதலீடு செய் வேண்டும். அதிகபட்சமாக ரூ.1.50 லட்சம் வரை முதலீடு செய்யலாம். இது கூட்டு கணக்காளர்களுக்கும் பொருந்தும். நீங்கள் PPF கணக்கை தொடங்கும் வருடத்தை சேர்க்காமல் அடுத்த 15 ஆண்டுகளுக்கு பின்னரே உங்களின் திட்டம் முதிர்ச்சி பெறும்.  

5 /9

உங்களுக்கு தேவைப்பட்டால் 15 ஆண்டுகளுக்கு பின்னர் மொத்த தொகையையும் எடுத்துக்கொள்ளலாம். இல்லையெனில், முதிர்ச்சி தொகையை கணக்கிலேயே வைத்துக்கொண்டு வட்டி வருவாயை மட்டும் பெறலாம். வருடந்தோறும் கொஞ்சம் கொஞ்சமாக கூட பணத்தை எடுக்கலாம். தேவைப்பட்டால் திட்டத்தை 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து, 20 ஆண்டுகள் வரை முதலீடு செய்யலாம்.  

6 /9

PPF திட்டத்தில் தற்போது 7.1 சதவீதம் வட்டி கொடுக்கப்படுகிறது. அந்த வகையில், இந்த திட்டத்தில் 20 ஆண்டுகளுக்கு மாதந்தோறும் ரூ.4 ஆயிரம், ரூ.8 ஆயிரம், ரூ.12 ஆயிரம் என முதலீடு செய்தால் மொத்தம் எவ்வளவு தொகையை பெறுவீர்கள் என்பதை இங்கு காணலாம்.  

7 /9

ரூ. 4 ஆயிரம்: PPF திட்டத்தில் 20 ஆண்டுகளுக்கு தொடர்ச்சியாக மாதந்தோறும் ரூ.4 ஆயிரத்தை செலுத்தினால் 9,60,000 ரூபாயை முதலீடு செய்திருப்பீர்கள். வட்டி வருவாய் 11,70,652 ரூபாயாக கிடைக்கும். மொத்தம் கணக்கில் 21,30,652 ரூபாய் இருக்கும்.   

8 /9

ரூ. 8 ஆயிரம்: PPF திட்டத்தில் 20 ஆண்டுகளுக்கு தொடர்ச்சியாக மாதந்தோறும் ரூ.8 ஆயிரத்தை செலுத்தினால் 19,20,000 ரூபாயை முதலீடு செய்திருப்பீர்கள். வட்டி வருவாய் 23,41,304 ரூபாயாக கிடைக்கும். மொத்தம் கணக்கில் 42,61,304 ரூபாய் இருக்கும்.   

9 /9

ரூ. 12 ஆயிரம்: PPF திட்டத்தில் 20 ஆண்டுகளுக்கு தொடர்ச்சியாக மாதந்தோறும் ரூ.12 ஆயிரத்தை செலுத்தினால் 28,80,000 ரூபாயை முதலீடு செய்திருப்பீர்கள். வட்டி வருவாய் 35,11,957 ரூபாயாக கிடைக்கும். மொத்தம் கணக்கில் 63,91,957 ரூபாய் இருக்கும்.