ஆசனவாயில் திடீரென்று அரிப்பு வருகிறதா..பட்டுனு இதை செய்தால் சட்டுனு அரிப்பு நின்றுவிடும்!

Tips To Prevent Anal Itching: ஆசன வாயில் ஏற்படும் அரிப்பு பிரச்சனையால் பலரும் அவதிப்படுகின்றனர். இது சங்கடம் ஏற்படுத்தும், மேலும் இது மன வருத்தத்தையும் உண்டாக்கும். திடீரென்று ஏற்படும் அரிப்பை குறைக்கவும், தடுப்பதற்கும் எளிய வழிகளை இங்கு வழங்கியுள்ளோம்.

Get Relief Immediately: ஆசன வாயில் அரிப்பு ஏற்படுவது பொதுவானது. இருந்தாலும், இந்த பிரச்சனை எப்போது வேண்டுமானாலும் யாருக்கும் ஏற்படலாம். எனவே, முன்னெச்சரிக்கையாக அரிப்பைத் தடுக்கவும், சரிசெய்யவும் எளிய மருத்துவ முறைகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.

 

1 /8

தூய்மையை பராமரிக்கவும்(Maintain cleanliness): ஆசன வாயைப் பகுதியை நன்கு கழுவி, ஒவ்வொரு முறை கழிப்பறை பயன்பாட்டிற்குப் பிறகு சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

2 /8

காற்று செல்லும் உடைகள் அணியவும்(Wear breathable clothing): தடிப்பு மற்றும் ஒட்டும் துணிகளை தவிர்த்து, சருமம் சுவாசிக்க உதவும் பருத்தி உடைகளை அணிய வேண்டும்.

3 /8

சமச்சீர் உணவுப் பழக்கம்(Balanced diet): அதிக மசாலா மற்றும் ஊறுகாய் போன்ற உணவுகளை தவிர்த்து, நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உணவில் சேர்க்க வேண்டும்.

4 /8

நீர்பானத்தை அதிகரிக்கவும்(Increase your water intake): மலச்சிக்கலை தவிர்க்க தினமும் போதுமான அளவு நீர் குடிக்க வேண்டும்.

5 /8

தினசரி உடற்பயிற்சி செய்யவும்(Exercise daily): நடைப்பயிற்சி மற்றும் யோகா போன்றவை செரிமானத்தை மேம்படுத்தி, அரிப்பை குறைக்க உதவும்.

6 /8

மருத்துவ ஆலோசனை பெறவும்(Seek medical advice.): அரிப்பு நீண்ட நாட்களாக தொடர்ந்தால் மருத்துவரை அணுகி சரியான காரணத்தை கண்டறிந்து, தேவையான சிகிச்சை பெற வேண்டும்.

7 /8

இயற்கை நிவாரணங்களை பயன்படுத்தவும்(Use natural remedies:): தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் அல்லது ஆலோவேரா போன்ற இயற்கை பொருட்களை மென்மையாக தடவி நிவாரணம் பெறலாம்.

8 /8

இந்த வழிகளை பின்பற்றுவதன் மூலம் ஆசன வாயில் ஏற்படும் அரிப்பு குறைந்து, இந்த சங்கடமான பிரச்சனையில் இருந்து விடுபடலாம்! பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.