குரு பெயர்ச்சி 2025: 6 ராசிகளுக்கு அட்டகாசமான வாழ்க்கை... கவலையை விடுங்க, கலக்கப்போறீங்க

Guru Peyarchi Palangal:சுப கிரகமான குரு பகவான் பெயர்ச்சி ஆகவுள்ளார். 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அடிக்கவுள்ளது. உங்கள் ராசியும் லிஸ்டில் உள்ளதா?

Guru Peyarchi Palangal: அனைத்து வித செல்வங்களையும் அளித்து வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுபவர் குரு பகவான். திருமண வாழ்க்கை, குழந்தைகள், செல்வம், கல்வி என அனைத்துக்கும் இவர் காரணி கிரகமாக உள்ளார். சனி பெயர்ச்சியை போலவே குரு பெயர்ச்சிக்கும் ஜோதிட ரீதியான முக்கியத்துவம் உள்ளது. மே மாதம் நிகழவுள்ள குரு பெயர்ச்சிக்கு பின் ராஜயோகம் பெறப்போகும் ராசிகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.

1 /11

அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் ராசியை மாற்றுவதாக ஜோதிட சாஸ்திரம் தெரிவிக்கின்றது. குரு பகவான் சுமார் 1 1/2 ஆண்டுகளுக்கு ஒரு முறை தனது ராசியை மாற்றுகிறார். 2025 ஆம் ஆண்டில் மே 14 ஆம் தேதி குரு பகவான் மிதுன ராசியில் பெயர்ச்சி ஆகவுள்ளார்.

2 /11

குரு பெயர்ச்சி மிகப்பெரிய ஜோதிட நிகழ்வாக இருப்பதால், அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் இருக்கும். எனினும் குறிப்பாக 6 ராசிக்காரர்கள் இதனால் அதிகப்படியான நன்மைகளை அடைவார்கள். அந்த ராசிகளை பற்றி இங்கே காணலாம்.

3 /11

மேஷம்: மேஷ ராசியில் பிறந்தவர்களின் வாழ்க்கையில் குரு பெயர்ச்சி நேர்மறையான மாற்றங்களைக் கொண்டுவரும். அவர்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழுமையான ஆதரவு கிடைக்கும். அலுவலக பணிகளில் ஏற்றம் இருக்கும். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். வாழ்வில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும்.

4 /11

ரிஷபம்: குரு பெயர்ச்சியின் தாக்கத்தால் ரிஷப ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பல வித முன்னேற்றங்கள் ஏற்படும். வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கான தடைகள் நீங்கும். தடைபட்ட வேலைகள் முடிவடையத் தொடங்கும். சமூக கௌரவம் அதிகரிக்கும். பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் கைகூடும்.

5 /11

மிதுனம்: குரு பெயர்ச்சி மிதுன ராசிக்காரர்களுக்கு நிதி ரீதியாக லாபகரமானதாக இருக்கும். தொழிலில் பெரும் வெற்றி கிடைக்கும், சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். இந்த நேரத்தில், எதிர்பாராத பல நல்ல செய்திகளை பெறுவீர்கள்.

6 /11

சிம்மம்: குரு பெயர்ச்சி சிம்ம ராசியில் பிறந்தவர்களின் வாழ்க்கையை மாற்றும். இதுவரை நீங்கள் சந்தித்து வந்த பிரச்சினைகள் படிப்படியாக மறைந்துவிடும். வணிகர்கள் மிகப்பெரிய நிதி லாபத்தைப் பெறுவார்கள். உடல்நலப் பிரச்சினைகள் நீங்கும்.

7 /11

கன்னி: குரு பெயர்ச்சியின் தாக்கத்தால், கன்னி ராசியில் பிறந்தவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெறுவார்கள். வியாபாரத்தில் பெரும் நிதி ஆதாயம் ஏற்படும். இந்த நேரத்தில், ஒரு புதிய வேலையைத் தொடங்கலாம் அல்லது வேலையில் மாற்றம் ஏற்படலாம். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும்.

8 /11

கும்பம்: குருவின் ராசி மாற்றத்தால், கும்ப ராசிக்காரர்கள் அனைத்து துறைகளில் வெற்றி பெறுவார்கள். வணிகர்கள் புதிய திட்டங்களின் மூலம் லாபம் காணலாம். அவை நிதி நன்மைகளைத் தரும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலையில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது. இவர்களுக்கு சனி பெயர்ச்சிக்கு பின்பு ஏழரை சனியின் இரண்டாம் கட்டமும் முடிவடையும்.

9 /11

மாணவர்கள் நல்ல மதிப்பெண்க்ளை பெற, தினமும் 'குரவே ஸர்வ லோகானாம், பிஷஜே பர ரோகிணாம்; நிதயே ஸர்வ வித்யானாம், ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தயே நம:' என்ற ஸ்லோகத்தை பாராயணம் செய்யலாம்.

10 /11

குரு பகவானின் விசேஷ அருள் பெற ஆலங்குடி தலத்திற்கு சென்று வழிபடலாம். நவக்கிரக தலங்களில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி குரு தலமாக உள்ளது.

11 /11

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.