மானிய விலை சிலிண்டர்.. உடனே ஆதார் இணைக்க வேண்டும்! - முக்கிய அறிவிப்பு

LPG cylinder : மானிய  விலையில் சிலிண்டர் வாங்குபவர்கள் உடனே ஆதார் கார்டு இணைக்க வேண்டும் என்ற முக்கிய அறிவிப்பு அரசிடமிருந்து வெளியாகியுள்ளது.

Aadhaar linking LPG cylinder Tamil Nadu : மானிய விலை எரிவாயு சிலிண்டர் பெறுபவர்கள் உடனடியாக ஆதார் கார்டு இணைக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு பயனாளிகளை அறிவுறுத்தியுள்ளது. இது குறித்த முழு விவரத்தை இங்கே தெரிந்து கொள்வோம்.

1 /7

மத்திய அரசு மானிய விலையில் ஏழை எளிய மக்களுக்கு எரிவாயு உருளைகளை வழங்கி வருகிறது. சிலிண்டருக்கான மானியம் நேரடியாக பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.

2 /7

இது குறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அம்மாவட்ட மக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். அதில் மானிய விலை சிலிண்டர்களை பலர் பெறாமல் இருப்பதாகவும், அதனால் அவர்களின் விவரங்களை பாரத் பெட்ரோலிய நிறுவனம் சேகரிக்க உள்ளதாக கூறியுள்ளார். 

3 /7

யாரெல்லாம் மானிய விலை சிலிண்டர் எடுக்கவில்லையோ அவர்களுக்கு கடிதம் அனுப்பப்பட இருப்பதாகவும், கடிதம் பெற்ற 15 நாட்களுக்குள் ஆதார் எண்ணுடன் மானிய விலை சிலிண்டர் புக்குடன் தகவலை அப்டேட் செய்ய வேண்டும் கூறியுள்ளார்.  

4 /7

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் கொடுத்திருக்கும் அந்த அறிவிப்பில், பாரத பிரதமரின் உஜ்வலா திட்டத்தின் கீழ் மானிய விலையில் எரிவாயு உருளை இணைப்பு பெற்ற பயனாளிகள் ஆதார் அட்டை எண்ணுடன் தங்களது பயனாளி விபரங்களை (e-KYC) உடனடியாக புதுப்பிக்க வேண்டும்.

5 /7

பாரத பிரதமரின் உஜ்வலா திட்டத்தின் கீழ் மானிய விலையில் எரிவாயு உருளைகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. எரிவாயு உருளை இணைப்பு பெற்ற பயனாளிகள் பலர், தங்களது முதல் எரிவாயு உருளைக்கு பிறகு நீண்ட காலமாக மாற்று எரிவாயு உருளை பெறாமல் உள்ளனர். 

6 /7

இவர்களுக்கு பாரத் பெட்ரோலியம் நிறுவனத்திடமிருந்து தனித்தனியாக நினைவூட்டு கடிதம் அனுப்பப்பட உள்ளது. எனவே இக்கடிதம் கிடைக்கப் பெற்ற 15 தினங்களுக்குள் பயனாளிகள் சம்பந்தப்பட்ட எரிவாயு முகவரிடம் தங்களது ஆதார் அட்டை எண்ணுடன் தங்களது பயனாளி விபரங்களை (e-KYC) உடனடியாக புதுப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.

7 /7

தவறும் பட்சத்தில் உஜ்வலா திட்டத்தின் கீழ் இணைப்பு பெற்ற பயனாளிகளின் எரிவாயு இணைப்புகள் ரத்து செய்யப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் எச்சரித்துள்ளார்.