IND vs AUS T20I: இந்திய அணிக்கு எதிராக மீதம் இருக்கும் மூன்று டி20ஐ போட்டிகளுக்கு ஆஸ்திரேலிய அணி தனது ஸ்குவாடில் சில மாற்றங்களை செய்துள்ளது. எந்தெந்த வீரர்கள் சேர்க்கப்படுகிறார்கள், யார் வெளியேறப்போவது என்பதை இங்கு கிளிக் செய்து காணலாம்.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் தற்போது 2 டி20ஐ போட்டிகளில் மோதியுள்ளன. ஆஸ்திரேலியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. அடுத்த மூன்று போட்டிகளையும் வெல்ல இந்தியாவும், மூன்றில் இரண்டை வெல்ல ஆஸ்திரேலியாவும் தீவிர முனைப்பு காட்டும்.
1/8இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான டி20ஐ தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. முதலிரண்டு போட்டிகள் தற்போது முடிவடைந்துள்ளன. முதல் போட்டி மழை காரணமாக முழுவதுமாக கைவிடப்பட்டது. 2வது போட்டியில் இந்தியா 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
2/82வது போட்டியில் ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக இருந்தவர் வேகப்பந்துவீச்சாளர் ஜாஷ் ஹேசில்வுட். இவர் பவர்பிளேவில் சுப்மான் கில், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா என டாப் ஆர்டர் வீரர்களை காலி செய்தார். தொடர்ச்சியாக 4 ஓவர்களை வீசி வெறும் 13 ரன்களை மட்டும் கொடுத்து ஹேசில்வுட் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
3/81-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா முன்னிலை பெற்றுள்ளது. மேலும், தொடரை கைப்பற்ற ஆஸ்திரேலியா நாளை நடைபெறும் 3வது போட்டியில் வெல்ல வேண்டியது முக்கியமாகும். மிட்செல் மார்ஷ் தலைமையிலான ஆஸ்திரேலியா அணி நாளைய போட்டியை கைப்பற்ற முனைப்பு காட்டும் என்பதில் சந்தேகமில்லை.
4/8ஆனால், ஆஸ்திரேலிய அணியின் டி20ஐ ஸ்குவாடில் 3வது போட்டி முதல் பெரிய மாற்றம் ஏற்பட இருக்கிறது. முக்கிய வீரர்கள் அணிக்குள் நுழையும் அதேநேரத்தில் தற்போது சிறப்பாக விளையாடிக்கொண்டிருக்கும் வீரர்கள் வெளியேற இருப்பது குறிப்பிடத்தக்கது.
5/83வது டி20ஐ போட்டியை பொருத்தவரை, இரண்டு ஆல்-ரவுண்டர்களை அணிக்குள் கொண்டு வருகிறது. ஏற்கெனவே, கேப்டன் மார்ஷ், மிட்செல் ஓவன், மார்கஸ் ஸ்டாய்னிஸ் ஆகியோர் இருக்கும் சூழலில், கிளென் மேக்ஸ்வெல், மாஹ்லி பியர்ட்மேன் ஆகியோர் ஸ்குவாடில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் பியர்ட்மேன் வேகப்பந்துவீச்சு ஆல்-ரவுண்டர் ஆவார். அடுத்த மூன்று போட்டிகளிலும் இவர்கள் ஸ்குவாடில் இருப்பார்கள்.
6/820 வயதான பியர்ட்மேன், 140 மணிக்கு கி.மீ., வேகத்தில் தொடர்ந்து பந்துவீசும் திறன்கொண்டவர். இதனால் இவருக்கு ஆஸ்திரேலியா வாய்ப்பு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணியில் அவர் இடம்பெற்றிருந்தார். இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஸ்குவாடில் சேர்க்கப்பட்டிருந்தார். ஆனால் இன்னும் இவர் ஒரு சர்வதேச போட்டியில் கூட விளையாடவில்லை.
7/8அதேநேரத்தில், கடந்த போட்டியில் சிறப்பாக வீசிய ஜாஷ் ஹேசில்வுட் அடுத்த மூன்று போட்டிகளிலும் கிடையாது. நவம்பர் 21ஆம் தேதி ஆஷஸ் தொடர் தொடங்க இருக்கும் சூழலில், ஹேசில்வுட்டுக்கு ஓய்வளிக்கும் பொருட்டு ஆஸ்திரேலியா இந்த முடிவை முன்னரே எடுத்திருந்தது. இதனாலேயே பியர்ட்மேனுக்கு ஸ்குவாடில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. சேன் அபார்ட் ஸ்குவாடில் நீடிக்கிறார். பென் டிவார்பிஷஸ் 4வது மற்றும் 5வது போட்டியில் மட்டும் விளையாடுவார் என தெரிகிறது.
8/8ஆஸ்திரேலிய அணியில் ஹேசில்வுட் இல்லாதது இந்திய அணிக்கு நல்ல செய்தி எனலாம். இந்திய அணிக்கு அடுத்த மூன்று போட்டியும் முக்கிய என்ற சூழலில், ஹேசில்வுட் இல்லாததை பயன்படுத்தி பவர்பிளேவில் அதிரடி காட்ட முனைப்பு காட்ட வேண்டும். இந்திய அணி அடுத்து மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே டி20ஐ தொடரை வெல்ல முடியும்.