இந்திய அணியில் பெரிய மாற்றம்... 4வது போட்டியில் விளையாடும் 11 வீரர்களின் லிஸ்ட் இதோ!

India Playing XI: இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில், இந்திய அணியில் விளையாடப்போகும் 11 வீரர்கள் யார் யார் என்பதை இங்கு விரிவாக பார்க்கலாம்.

India vs England: இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டர் நகரில் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நாளை மறுதினம் (ஜூலை 23) தொடங்குகிறது. இந்த போட்டியில் இந்திய அணியின் பல வீரர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளதால், பிளேயிங் லெவனிலும் பெரிய மாற்றங்கள் செய்யப்பட உள்ளன.

1 /12

1. யஷஸ்வி ஜெய்ஸ்வால் (Yashasvi Jaiswal): நடப்பு தொடரில் 6 இன்னிங்ஸில் ஒரு சதம் உள்பட 233 ரன்களை இவர் அடித்துள்ளார். அதிரடியாக இவர் விளையாடி ரன்களை குவித்தாலும் கூட இன்னும் சற்று பொறுப்பான ஆட்டத்தை ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.   

2 /12

2. கேஎல் ராகுல் (KL Rahul): நடப்பு தொடரில் தனது முழு அனுபவத்தையும் வெளிக்காட்டி வருகிறார், கேஎல் ராகுல். 6 இன்னிங்ஸில் 375 ரன்களை அடித்திருக்கிறார். அதில் இரண்டு சதமும் அடக்கம். 4வது போட்டியிலும் இவரது பங்கு மிக முக்கியம் ஆகும்.  

3 /12

3. கருண் நாயர் (Karun Nair): 6 இன்னிங்ஸிலும் சேர்த்து 131 ரன்களை மட்டுமே அடித்திருக்கும் இவர் தொடர்ந்து சொதப்பி வருகிறார். இவருக்கு பதில் சாய் சுதர்சனுக்கு மேலும் ஒரு வாய்ப்பை கொடுக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது. சாய் சுதர்சனை விட கருண் நாயரின் அனுபவம் இத்தொடரில் இந்தியாவுக்கு தேவை என்பதால் கருண் நாயருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படலாம்.   

4 /12

4. சுப்மான் கில் (Shubman Gill): நடப்பு தொடரிலேயே அதிக ரன்களை குவித்தவர் கில் தான். 6 இன்னிங்ஸில் 607 ரன்களை குவித்திருக்கிறார். ஆனால் 3வது போட்டியில் வெறும் 22 ரன்களை மட்டுமே இரண்டு இன்னிங்ஸிலும் அடித்திருந்தார். எனவே இந்த போட்டியில் பேட்டிங்கில் சிறப்பாக விளையாட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.   

5 /12

5. ரிஷப் பண்ட் (Rishabh Pant): கடந்த போட்டியில் காயமடைந்தாலும் இந்த போட்டியில் இவரின் பேட்டிங் இந்திய அணிக்கு தேவை. நடப்பு தொடரில் 6 இன்னிங்ஸில் 425 ரன்களை அடித்திருக்கிறார் பண்ட். பண்டும் 2 சதங்களை அடித்திருக்கிறார்.  

6 /12

6. துருவ் ஜூரேல் (Dhuruv Jurel): கடந்த போட்டியிலேயே ரிஷப் பண்டுக்கு பதிலாக விக்கெட் கீப்பிங்கை கவனித்துக்கொண்ட இவர், இந்த முறை பிளேயிங் லெவனில் இடம்பெறுவார். இதனால் பேட்டிங்கும் பலப்படும், விக்கெட் கீப்பிங் பிரச்னையும் இருக்காது. இவர் கீழ்வரிசையில் பொறுமையுடன் விளையாடுவார் என்பதால் பேட்டிங்கின் பலம் கூடும் எனலாம்.   

7 /12

7. ரவீந்திர ஜடேஜா (Ravindra Jadeja): இவர் 6 இன்னிங்ஸ்களில் 327 ரன்களை அடித்திருக்கிறார். கடந்த 4 இன்னிங்ஸ்களில் தொடர்ச்சியாக 4 அரைசதங்களை அடித்துள்ளார். கடந்த போட்டியில் கடைசி நாள் வரை போராடி இந்திய அணியை வெற்றியின் பக்கம் கொண்டு வந்தார், ஆனால் அது நிறைவேறவில்லை. அடுத்த 2 போட்டிகளையும் வெல்ல ஜடேஜா அணியில் இருப்பது முக்கியம்.  

8 /12

8. வாஷிங்டன் சுந்தர் (Washington Sundar): கடந்த 2 போட்டிகளாக இவர் அணியில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் நல்ல பங்களிப்பை அளிக்கிறார். இவர் இருப்பதால் நம்பர் 8 வரை பேட்டிங்கும் கிடைக்கிறது, பந்துவீச்சு ஆப்ஷனும் வருகிறது.   

9 /12

9. ஜஸ்பிரித் பும்ரா (Jasprit Bumrah): இவர் இத்தொடரில் 3 போட்டிகளில் மட்டும் விளையாடுவார் என கூறப்பட்டது. முதல் 3 போட்டிகளில் 2இல் விளையாடிவிட்ட இவர், தற்போது 10 நாள்கள் ஓய்வுக்கு பின் நடைபெறும் 4வது போட்டியில் நிச்சயம் விளையாடுவார் என கூறப்படுகிறது. தற்போது அர்ஷ்தீப் சிங், ஆகாஷ் தீப், நிதிஷ் குமார் ரெட்டி ஆகியோர் காயத்தில் சிக்கியிருக்கும் நிலையில் பும்ரா அணியில் நீடிப்பது அவசியம்.  

10 /12

10. முகமது சிராஜ் (Mohammed Siraj): இவர் தொடர்ந்து அனைத்து போட்டிகளிலும் விளையாடி வருகிறார். இந்த போட்டியிலும் விளையாடுவார். நடப்பு தொடரில் இவர்தான் அதிக விக்கெட்டை எடுத்துள்ளார், இந்திய அணிக்கு அதிக ஓவர்களையும் வீசியிருக்கிறார்.   

11 /12

11. அன்ஷுல் கம்போஜ் (Anshul Kamboj): பிரசித் கிருஷ்ணா முதலிரண்டு போட்டிகளில் சொதப்பிவிட்டார், நிதிஷ் ராணா முதல் போட்டிக்கு பின்னரே கழட்டிவிடப்பட்டார். ஆகாஷ் தீப்பிற்கு காயம் ஏற்பட்டிருக்கிறது. நிதிஷ்குமார் ரெட்டி, அர்ஷ்தீப் தொடரில் இருந்து விலகி உள்ளனர். இந்த சூழலில் ஸ்குவாடில் சேர்க்கப்பட்டுள்ள அன்ஷுல் 4வது போட்டியிலேயே விளையாடுவார் எனலாம்.   

12 /12

12. ஒருவேளை குல்தீப் யாதவை (Kuldeep Yadav) விளையாட வைக்க வேண்டும் என முடிவெடுத்தால் கருண் நாயரை வெளியே வைத்துவிட்டு, துருவ் ஜூரேலை நம்பர் 3இல் விளையாட வைக்கலாம். ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் வெளிநாடுகளில் பார்ட் டைம் ஸ்பின்னர்களாகவே பார்க்கப்பட வேண்டும். குல்தீப் யாதவ் போன்ற பிரீமியம் ஸ்பின்னர் அணியில் இருப்பது தற்போதைய சூழலில் பெரிய பலமாக இருக்கும்.