IND vs ENG: 3வது டெஸ்டில் இந்திய அணி தோற்றதற்கான 7 காரணங்கள் இங்கே.
7 Reasons For India Lost Against England: இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டி கடந்த 10ஆம் தேதி தொடங்கு நேற்று (ஜூலை 14) முடிவடைந்தது. லண்டன் லார்ட்ஸில் நடந்த இப்போட்டியில் இந்திய அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், இப்போட்டியில் இந்திய அணி தோற்றதற்க்கான 7 காரணங்கள் பார்க்கலாம்.
1/7இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ரிஷப் பண்ட் ரன் அவுட் ஆனார். அது மிகப்பெரிய திருப்புமுனையாக மாறியது. அவர் 74 ரன்களில் ஆட்டமிழந்தார். ரிஷப் பண்ட் ரன் அவுட் ஆகாமல் களத்தில் இருந்திருந்தால், இந்திய அணி இங்கிலாந்து அணி எடுத்த 387 ரன்களை விட கூடுதலாக 50 முதல் 100 ரன்கள் வரை எடுத்திருக்க வாய்ப்பிருந்திருக்கும்.
2/7இரண்டாவது இன்னிங்ஸில் ஜெய்ஸ்வாலின் பொறுப்பற்ற ஷாட்டும் இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோற்றதற்கு ஒரு முக்கிய காரணம் ஆகும். அவர் முதல் இன்னிங்ஸில் 13 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில், இரண்டாவது இன்னிங்ஸில் பொறுப்புடன் களத்தில் நிலைத்து இந்திய அணிக்கு வெற்றியை பெற்று தருவார் என எதிர்பார்த்த நிலையில், அவர் டக் அவுட் ஆகி ஏமாற்றத்தை அளித்தார்.
3/7இந்திய பந்து வீச்சாளர்கள் முதல் இன்னிங்சில் 31 கூடுதல் ரன்களையும், இரண்டாவது இன்னிங்சில் 32 கூடுதல் ரன்களையும் விட்டுக்கொடுத்தனர். குறைந்த ஸ்கோர் கொண்ட துரத்தலில் மொத்தம் 63 கூடுதல் ரன்கள் விலை உயர்ந்ததாக நிரூபிக்கப்பட்டது. ஏனெனில் இது இங்கிலாந்தின் இலக்கை திறம்பட அதிகரித்தது.
4/7முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ரன்களை குவித்த சுப்மன் கில், மூன்றாவது டெஸ்டில் சொர்ப்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். அவர் முதல் இன்னிங்ஸில் 16 ரன்களும் இரண்டாவது இன்னிங்ஸில் 6 ரன்களும் மட்டுமே எடுத்தார். இந்தியாவின் தோல்விக்கு இதுவும் ஒரு முக்கிய காரணம் ஆகும்.
5/7மூன்றாவது டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் ஜேமி ஸ்மித் 5 ரன்களில் இருந்தபோது ஒரு கேட்ச் கொடுத்தார். அதனை கே.எல். ராகுல் விட்டுவிட்டார். அந்த இன்னிங்ஸில் ஜேமி ஸ்மித் 51 ரன்கள் எடுத்தார். மறுபக்கம் பிரைடன் கார்ஸ் 56 ரன்களை எடுத்தார். இங்கிலாந்து அணி 271/7 என்ற நிலையில் இருந்த பிறகு 100 ரன்களுக்கு மேல் சேர்த்து 387 ரன்களை எட்டியது. இதுவும் இந்திய அணி தோற்றதற்கு முக்கிய காரணம்.
6/7இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங்கில் கடும் சரிவை சந்தித்தது. இதனால், 193 என்ற எளிய இலக்கை இந்திய அணியால் எட்டமுடியாமல் போனது. இரண்டாவது இன்னிங்ஸில் ஜடேஜா மட்டுமே சிறப்பாக விளையாடினார் அவர், கடைசி வரை ஆட்டமிழக்காமல் 61 ரன்களை சேர்த்திருந்தார்.
7/7லார்ட்ஸ் டெஸ்டின் 4வது இன்னிங்ஸில், பென் ஸ்டோக்ஸ் (3/48) மற்றும் ஜோஃப்ரா ஆர்ச்சர் (3/55) தலைமையிலான இங்கிலாந்து பந்து வீச்சாளர்கள், மோசமான ஆடுகளத்தை திறம்பட பயன்படுத்தி இந்திய பேட்டர்னை தொந்தரவு செய்தனர். லார்ட்ஸ் மைதானத்தில் ஸ்டோக்ஸின் 19.2 ஓவர் பந்து வீச்சும், அழுத்தத்தின் கீழ் அவரது கேப்டன்சியும் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு முக்கியமானவை.