இந்தியா - நியூசிலாந்து போட்டி எத்தனை மணிக்கு? எதில் பார்க்கலாம்?

சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடர் பிப்.19 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 

சாம்பியன்ஸ் டிராபி அரை இறுதி போட்டிக்கு தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் தகுதி பெற்றுள்ளன.

 

1 /7

சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதவுள்ள குரூப் ஏ பிரிவு போட்டி இன்று (மார்ச் 02) நடைபெற உள்ளது.   

2 /7

இப்போட்டியில் கிடைக்கும் வெற்றி தோல்வியை பொறுத்தே அரை இறுதிக்கு தகுதியான அணிகள் எந்தெந்த அணியுடன் அரை இறுதி போட்டியில் மோதப்போன்றன என்பது தெரியவரும்.   

3 /7

குரூப் பி பிரிவில் தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அரை இறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளன. இந்த நிலையில், இந்தியா - நியூசிலாந்து மோதும் போட்டி முக்கியத்துவம் பெறுகிறது.   

4 /7

இப்போட்டி துபாய் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்திய நேரப்படி மதியம் 2 மணிக்கு டாஸ் போடப்பட்டு, 2.30 மணிக்கு போட்டி தொடங்கும்.   

5 /7

இப்போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி மற்றும் ஸ்போர்ட்ஸ் 18 தொலைக்காட்சியில் காணலாம். மொபைல் மற்றும் இணையதளத்தில் ஸ்ட்ரீமிங் மூலம் ஜியோ ஹாட்ஸ்டார் செயலி அல்லது ஜியோ ஹாட்ஸ்டார் இணையதளத்தில் பார்க்கலாம்  

6 /7

இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் போட்டி குரூப் சுற்றின் கடைசி போட்டி ஆகும். அடுத்ததாக மார்ச் 04 ஆம் தேதி முதல் அரை இறுதிப்போட்டி துபாய் மைதானத்தில் நடைபெற இருக்கிறது.   

7 /7

கணிக்கப்பட்ட இந்திய அணியின் பிளேயிங் 11: கே.எல்.ராகுல், சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா.