IND vs PAK: டி20ஐ போட்டிகளில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக இந்த 5 இந்திய வீரர்கள் முதல்முறையாக விளையாடுகிறார்கள். இது ஏன் முக்கியம் என்பதை இங்கு காணலாம்.
இந்தியா - பாகிஸ்தான் அணிகள் ஆசிய கோப்பை தொடரின் குரூப் சுற்று போட்டியில் நாளை (செப். 13) மோத உள்ளது. இதன்பின் இரு அணிகளும் சூப்பர் 4 சுற்றிலும் மோதும் என எதிர்பார்க்கப்படுகிறது. போட்டியின் மீது பல எதிர்பார்ப்புகள் உள்ளன.
1/8இந்தியா - பாகிஸ்தான் மோதுகிறது (IND vs PAK) என்றாலே உலக கிரிக்கெட் உற்று பார்க்கும் எனலாம். தற்போது இந்த இரு அணிகளும் ஐசிசி கோப்பையிலும், ஆசிய கோப்பையிலும் மட்டுமே விளையாடி வருகின்றன.
2/8இந்தச் சூழலில், இந்த 5 இந்திய வீரர்கள் டி20 அரங்கில் முதல்முறையாக பாகிஸ்தான் அணியுடன் மோத உள்ளது. அந்த 5 வீரர்கள் யார் யார் என்பதை இங்கு காணலாம்.
3/8சுப்மான் கில் (Shubman Gill): இவர் டி20ஐயில் முதல்முறையாக பாகிஸ்தானை எதிர்கொள்கிறார். இந்தாண்டு தொடக்கத்தில்தான் இதே ஐக்கிய அரபு அமீரகத்தில் சுப்மான் கில், பாகிஸ்தான் அணியுடன் விளையாடியிருந்தார். அந்த போட்டியிலும் 46 ரன்களை அவர் அடித்திருந்தார்.
4/8அபிஷேக் சர்மா (Abisheik Sharma): இவர் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடும் முதல் போட்டியும் இதுதான். பாகிஸ்தானின் பவர்பிளே பந்துவீச்சை எப்படி சமாளிக்கிறார் என்பதை காண பலரும் ஆவலுடன் இருக்கிறார்கள்.
5/8சஞ்சு சாம்சன் (Sanju Samson): இவரும் இதுவரை பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடியதே இல்லை. அதுமட்டுமின்றி சாம்சன் நம்பர் 5இல் விளையாட இருப்பதும் கவனிக்கத்தக்கது.
6/8திலக் வர்மா (Tilak Varma): இவருக்கும் இதுதான் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டி. அப்படியிருக்க, நம்பர் 4இல் பாகிஸ்தானின் சுழற்பந்துவீச்சை திலக் வர்மா விளாசித் தள்ளுவார் என கூறப்படுகிறது.
7/8குல்தீப் யாதவ் (Kuldeep Yadav): இவர் ஓடிஐயில் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடியிருந்தாலும், டி20ஐஇல் முதன்முதலாக விளையாட இருக்கிறார். நிச்சயம் பாகிஸ்தானின் மிடில் ஆர்டருக்கு இவர் சிம்மசொப்பனமாக இருப்பார்.
8/8பாகிஸ்தான் போட்டி என்றாலே பெரிய அழுத்தம் நிறைந்த போட்டி எனலாம். அப்படியிருக்க டி20ஐயில் முதல்முறையாக இந்த 5 வீரர்கள் பாகிஸ்தானை எதிர்கொள்வது கூடுதல் அழுத்தமாகவும் இருக்கும். எனவே இந்த 5 வீரர்கள் அதிகம் கவனிக்கப்படுவார்கள். இவர்கள்தான் பிளேயிங் லெவனில் முக்கிய வீரர்கள் எனும் நிலையில், இவர்கள் சொதப்பினால் இந்திய அணியே சொதப்பிவிடும் என்பதால் இது முக்கியம்.