Weekly Astro: மேஷம் முதல் மீனம் வரை... இந்த வாரத்தின் அதிர்ஷ்ட ராசிகள் எவை...

Published: Apr 20, 2025, 07:59 AM IST|Updated: Apr 20, 2025, 07:59 AM IST

Weekly Horoscope: ஏப்ரல் 21ம் தேதியுடன் துவங்கும் இந்த வாரத்தில், சில ராசிகளுக்கு சுப பலன்கள் கிடைக்கும் என்றும், அதே சமயம் சில ராசிகள் பேச்சில், செயலில் கவனமாக இருக்கும் எனவும் ஜோதிடர்கள் கணித்துள்ளனர். அதோடு ராசிகளுக்கு ஏற்ற பரிகாரங்களையும் கூறியுள்ளனர்.

வார ராசிபலன்: ஏப்ரல் 21 தேதியுடன் துவங்கும் இந்த வாரத்தின் கிரக நிலைகளின் அடிப்படையில் மேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிகளுக்கும் எப்படி இருக்கும் என்பதை ஜோதிடர்கள் கணித்துள்ளதை அறிந்து கொள்ளலாம். இந்த வாரம் சில ராசிகளுக்கு சாதகமான பலன்களும் சில ராசிகளுக்கு பாதகமான பலன்களும் கிடைக்கலாம்.

 

Mesham Weekly Horoscope1/13

மேஷ ராசிக்கான வார பலன்கள்

மேஷ ராசியினருக்கு இந்த வாரம் வாய்ப்புகள் தேடி வரும். சுப செலவுகள் ஏற்படும் வாய்ப்பு உண்டு. எனினும் வேலைப்பளு அதிகரிக்கலாம். ஆனால் அதற்கான ஆதாயமும் கிடைக்கும். கோபத்தை கட்டுப்படுத்தினால் நினைத்த காரியம் அனைத்தும் எளிதாக கைக்கூடும். முருக வழிபாடு செய்வதும், சிவனின் ஸ்தலங்களுக்கு சென்று வருவதும் நன்மைகளை அள்ளிக் கொடுக்கும்.

Rishabam Weekly Horoscope2/13

ரிஷப ராசிக்கான வார பலன்கள்

ரிஷப ராசியினருக்கு வேலையில் சக ஊழியர்களிடமிருந்து நல்ல ஒத்துழைப்பு கிடைக்கும். வாழ்க்கை மீறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டு. உங்கள் மீதான மதிப்பும் மரியாதையும் உயரும். பண வரவு திருப்தியைக் கொடுக்கும். விநாயகர் வழிபாடு மேற்கொள்வது நினைத்த காரியம் கைகூட உதவும்.

Mithunam Weekly Horoscope3/13

மிதுன ராசிக்கான வார பலன்கள்

மிதுன ராசியினர் வாழ்க்கையில் சந்தித்து வந்த பிரச்சனைகளில் இருந்து படிப்படியாக விடுபடும் வாய்ப்பு கிடைக்கும். உற்சாகத்தோடு செயல்பட்டு இலக்குகளை எளிதாக அடைவீர்கள். எனினும் முடிந்தவரை மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பதால் பல பிரச்சனைகளை தவிர்க்கலாம். முருக வழிபாடும், ஏழைகளுக்கு அன்னதானம் கொடுப்பதும் வாழ்க்கையில் அதிர்ஷ்டத்தை கொண்டு வந்து சேர்க்கும்.

 

Kadagam Weekly Horoscope4/13

கடக ராசிக்கான வார பலன்கள்

கடக ராசியினருக்கு பண வரவுகள் சிறப்பாக இருப்பதால், தேவைகளை எளிதாக பூர்த்தி செய்தீர்கள். எதிர்பாராமல் கிடைக்கும் அனுகூலங்கள் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு பெரிதும் உதவும். பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்பு உண்டு. மாணவர்கள் விரும்பிய கல்வியை தேர்ந்தெடுத்து படிக்கும் வாய்ப்பு கிடைக்கும்.

Simmam Weekly Horoscope5/13

சிம்ம ராசிக்கான வார பலன்கள்

சிம்ம ராசியினருக்கு இந்த வாரம் சிறிது மன சஞ்சலங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. ஆரோக்கியமும் ஓரளவு பாதிக்கப்படும். இதனால் மருத்துவ செலவுகள் ஏற்படலாம். சிக்கனமாக இருப்பதால் பிரச்சினையை கையாளலாம். வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. துர்க்கை அம்மனுக்கு ராகு காலத்தில் தீபம் ஏற்றி வழிபடுவதும், லட்சுமி நரசிம்மர் வழிபாடும், கஷ்டங்களை நீக்கும் சிறந்த பரிகாரமாக இருக்கும்.

Kanni Weekly Horoscope6/13

கன்னி ராசிக்கான வார பலன்கள்

கன்னி ராசியினருக்கு இந்த வாரம், நிதி வரவுக்கான வாரமாக இருக்கும். குடும்பத்தில் மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்வுகள் நடக்கும் வாய்ப்பு அதிகம் உண்டு. வேலையில் தொழில் வளர்ச்சி அடைவதற்கான வாய்ப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள், கடின உழைப்பிற்கான அங்கீகாரத்தை பெறுவார்கள். கால பைரவ வழிபாடு செய்வதன் மூலம், வாழ்க்கையில் அனைத்து செல்வங்களையும் பெறலாம்.

Thulam Weekly Horoscope7/13

துலாம் ராசிக்கான வார பலன்கள்

துலாம் ராசியினருக்கு எதிர்ப்புகள் அனைத்தும் நீங்கி மன நிம்மதியை கொடுக்கும் பாரமாக இருக்கும். வேலையில் தொழிலில் உழைப்புக்கான பலனை அறுவடை செய்யும் காலம் வந்துவிட்டது. அசையும் அசையும் சொத்துக்கள் மீது முதலீடு செய்யும் வாய்ப்பு உள்ளது. கடினமான வேலையை கூட சுலபமாக செய்து முடித்து பாராட்டுகளை பெறுவீர்கள். வியாழக்கிழமைகளில் தக்ஷிணாமூர்த்தி வழிபாடு செய்வது நன்மைகளை அள்ளிக் கொடுக்கும்.

Viruchigam Weekly Horoscope8/13

விருச்சிக ராசிக்கான வார பலன்கள்

விருச்சிக ராசியினருக்கு, பண வரவு சிறப்பாக இருக்கும். மனை வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வேலையில் திறமைக்கான அங்கீகாரத்தை பெறும் வாய்ப்பு உண்டு. மாணவர்கள் தேர்வுகளில் சிறந்து விளங்குவார்கள். விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். துர்க்கை அம்மனை வழிபடுவது, நினைத்த காரியம் கைகூட உதவும்.

Dhanusu Weekly Horoscope9/13

தனுசு ராசிக்கான வார பலன்கள்

தனுசு ராசியினருக்கு தேவையில்லாத அலைச்சல்கள் ஏற்படக்கூடும். வீண் பேச்சால் பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். எனவே வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. உங்களுக்கு கிடைக்கக்கூடிய நல்வாய்ப்புகளை சிறப்பாக பயன்படுத்திக் கொள்ள முயற்சி எடுப்பது நல்லது. எல்லோரையும் முழுமையாக நம்பாமல், முக்கிய முடிவுகளை சிந்தித்து எடுக்கவும். ஆஞ்சநேயர் வழிபாடும், முருக வழிபாடும், இன்னல்களை நீக்கும் சிறந்த பரிகாரமாக இருக்கும்.

Magaram Weekly Horoscope10/13

மகர ராசிக்கான வார பலன்கள்

மகர ராசியினருக்கு இந்த வாரம் லாபத்தை அள்ளிக் கொடுக்கும் வாரமாக இருக்கும். பொருளாதார சிறப்பாக இருக்கும். விட்டுக்கொடுத்து செல்வதால் வாழ்க்கையில் இன்னும் பல மேன்மைகளை அடையலாம். திறமையை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பங்கள் அமையும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள பணிகள் நிறைவடையும். சிவபெருமானின் வழிபாடு, தடைகளை நீக்கும் சிறந்த பரிகாரமாக இருக்கும்.

Kumbam Weekly Horoscope11/13

கும்ப ராசிக்கான வார பலன்கள்

கும்ப ராசியினருக்கு நெருக்கடிகள் அனைத்தும் நீங்கி, நிம்மதியான வாழ்க்கையை கொடுக்கும் பாரமாக இருக்கும். முதலீடுகள் மூலம் நல்ல வருமானம் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு, வேலையில் எதிர்பார்த்த மாற்றங்கள் உண்டாகும். சுறுசுறுப்பாக செயல்படுவதால், வேலையில் நல்ல பெயர் வாங்கலாம். வெங்கடேச பெருமாளை வணங்குவதும், துர்க்கை அம்மன் வழிபாடும் நல்ல பலன்களைக் கொடுக்கும்.

Meenam Weekly Horoscope12/13

மீன ராசிக்கான வார பலன்கள்

மீன ராசியினருக்கு, இந்த வாரம் அலைச்சல் இடையூறுகள் ஆகியவற்றை சந்திக்க நேரிடலாம். இதனால் மன அழுத்தம் ஏற்படலாம். உடல்நல பாதிப்பு காரணமாக, கவலைகளும் அதிகரிக்கலாம். எனினும் எதிலும் கவனமாக செயல்படுவதால் அடைய வேண்டிய இலக்கை எளிதாக அடையலாம். ஞாபகம் மறதி அதிகம் ஏற்படும் என்பதால் கவனமாக செயல்படுவது நல்லது. விநாயகர் வழிபாடும், தக்ஷிணாமூர்த்தி வழிபாடும் இன்னல்களை நீக்கும் சிறந்த பரிகாரமாக இருக்கும்.

 

Disclaimer13/13

பொறுப்புத் துறப்பு

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.