IPL 2025: வீரர்களின் பாதுகாப்பு முக்கியம்! ஐபிஎல் நிர்வாகம் எடுத்த முக்கிய முடிவு!

India Pakistan War: இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே சண்டை நேற்று இரவு முழுவதும் நடைபெற்ற நிலையில், ஐபிஎல் 2025 போட்டிகள் பாதியில் நிறுத்தப்படுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

1 /9

நேற்று இரவு முழுவதும் இந்தியாவிற்கு பாகிஸ்தானுக்கு இடையே சண்டை நடைபெற்று வரும் நிலையில் இன்று ஐபிஎல் தொடர்பாக முக்கிய முடிவுகளை எடுக்க உள்ளனர்.

2 /9

பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகளுக்கு இடையில் நேற்று தரம்சாலாவில் நடைபெற்ற ஐபிஎல் போட்டிகள் 10 ஓவர்கள் நடைபெற்ற நிலையில் பாதுகாப்பு காரணங்களுக்காக பாதியில் நிறுத்தப்பட்டது.

3 /9

வீரர்கள் மற்றும் ரசிகர்களை பாதுகாப்பான முறையில் தரம்சாலா மைதானத்தை விட்டு வெளியேற்றினர்.  அந்தப் பகுதியில் உள்ள விளக்குகள் அணைக்கப்பட்டு துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

4 /9

நிறைய வெளிநாட்டு வீரர்கள் ஐபிஎல்லில் விளையாடி வரும் நிலையில் அவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, தொடர்ந்து ஐபிஎல் போட்டிகளை நடத்தலாமா என்று மத்திய அரசிடம் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

5 /9

பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா மத்திய அரசின் உத்தரவிற்காக காத்துக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மத்திய அரசின் அறிவிப்பின்படி போட்டியை மாற்றி வைக்கலாமா அல்லது நிறுத்தலாமா என்பதை முடிவு செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார்.

6 /9

ஒவ்வொரு அணியிலும் உள்ள வெளிநாட்டு வீரர்களுக்கு கூடுதல் பாதுகாப்பை அளிக்குமாறு அணியின் நிர்வாகத்திற்கு ஐபிஎல் நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

7 /9

தரம்சாலாவில் மட்டுமில்லாமல் அடுத்தடுத்த போட்டிகள் நடைபெறும் மைதானங்களுக்கும் பாதுகாப்பு வழங்குவது மிகவும் சிரமம் என்பதால் என்ன செய்யலாம் என்பதை தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர்.

8 /9

இருப்பினும் முழு ஐபிஎல் போட்டிகளும் தடை செய்யப்படாது என்றும் போட்டிகளின் தேதிகளை மாற்றி அமைக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.  

9 /9

ஆனால் அப்படி செய்தால் சர்வதேச போட்டிகளில் மாற்றங்கள் செய்ய வேண்டும். ஏனென்றால் அனைத்தும் முன்கூட்டியே திட்டமிடப்பட்டது. இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையில் மத்திய அரசு மற்றும் ஐபிஎல் நிர்வாகம் என்ன மாதிரியான திட்டங்களை கொண்டு வர உள்ளனர் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்