Ind vs Aus 1st T20: இந்திய அணியின் பிளேயிங் 11 இதுதான்.. உள்ளே வரும் 2 முக்கிய வீரர்கள்!

Written ByR Balaji
Published: Oct 27, 2025, 04:12 PM IST|Updated: Oct 27, 2025, 04:12 PM IST

India Predicted Playing 11 For Australia T20: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் நாளை மறுநாள் (அக்டோபர் 29) தொடங்கி நவம்பர் 08ஆம் தேதி வரை நடைபெறுகிறது.  

 

India Predicted Playing 11 For Australia T20: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் 11 என்னவாக இருக்கும் என்பதை பார்க்கலாம். 

1/12

2/12

சுப்மன் கில்: இந்திய டி20 அணியின் துணை கேப்டன் சுப்மன் கில் தொடக்க வீரராக களம் இறங்குவார். இவர் அனைத்து வடிவ கிரிக்கெட்டிலும் சிறப்பாக விளையாடி வருகிறார். 

3/12

அபிஷேக் சர்மா: தற்போதைய இந்திய டி20 அணியின் அதிரடி தொடக்க வீரராக திகழ்பவர் அபிஷேக் சர்மா. இவர் சுப்மன் கில்லுடன் தனது பேட்டிங்கை தொடங்குவார். 

4/12

சூர்யகுமார் யாதவ்: இந்திய டி20 அணியின் வெற்றிகரமான ஒரு கேப்டனாக வலம் வரும் சூர்யகுமார் யாதவ் 3வது அல்லது 4வது இடத்தில் களம் இறங்குவார். 

5/12

திலக் வர்மா: இந்திய டி20 அணியின் தவிர்க்க முடியாத வீரராக மாறி வருகிறார் திலக் வர்மா. இவர் 3வது அல்லது 4வது இடத்தில் களம் இறங்குவார். 

6/12

சஞ்சு சாம்சன்: விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான சஞ்சு சாம்சன் 5வது இடத்தில் களமிறங்குவார். இவர் டி20 அணியில் மட்டுமே தொடர்ந்து விளையாடி வருகிறார். 

7/12

அக்சர் படேல்: ஆல்-ரவுண்டர் அக்சர் படேல் மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் அசத்தி தனது பெயரை பதிவு செய்துள்ளார். இவர் சிவம் துபே-வுக்கு முன்பாகவே பேட்டிங் செய்ய களத்திற்கு வர அதிக வாய்ப்பிருக்கிறது. 

8/12

சிவம் துபே: பேட்டிங் ஆல்-ரவுண்டர் சிவம் துபே ஸ்பின்னர்களுக்கு எதிராக சிறப்பாக விளையாடக்கூடியவர். இவர் மிடில் ஆர்டரில் இறங்குவது இந்திய அணிக்கு பலமாக அமையும். 

9/12

குல்தீப் யாதவ்: இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ், இத்தொடரின் சிறந்த வீரராக அமைய அதிக வாய்ப்புள்ளது. இவரது பந்து வீச்சு எதிரணியின் பேட்டிங்கை நிலைகுலைய செய்யும். 

10/12

ஹர்ஷித் ராணா: ஒருநாள் தொடரில் சிறப்பாக பந்து வீசிய ஹர்ஷித் ராணா, டி20 அணியிலும் இடம் பெற அதிக வாய்ப்புள்ளது. அவர் இடம் பெறும் பட்சத்தில், அணியின் இரண்டாவது பந்து வீச்சாளராக இருப்பார். 

11/12

ஜஸ்பிரித் பும்ரா: இந்திய அணியின் ஸ்டார் பவுலர் ஜஸ்பிரித் பும்ரா, பல ஆண்டுகளாக வெற்றியாளராக திகழ்ந்து வருகிறார். இவர் இத்தொடரில் குறைந்தது 3 போட்டியில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

12/12

வருண் சக்கரவர்த்தி: தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி சமீப காலமாகவே இந்திய டி20 அணியின் முக்கிய பந்து வீச்சாளராக இருந்து வருகிறார். இவரின் பங்கு அணிக்கு அவசியமானதாக இருக்கிறது.