வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி.. பும்ரா வெளியே.. இந்திய அணியின் பிளேயிங் 11!

India Predicted Playing XI: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் பிளேயிங் 11 பற்றி பார்க்கலாம். 

India vs West Indies 2nd Test Match: இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 140 ரன்கள் வித்தியாசத்தில் ஆதிக்கம் செலுத்தி வெற்றி பெற்றது. இதையடுத்து அக்டோபர் 10 ஆம் தேதி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தொடங்க இருக்கிறது. இந்த போட்டியில் பும்ராவுக்கு ஓய்வு அளிக்க இருப்பதாக தெரிகிறது. அவருக்கு பதில் உள்ளே வரும் வீரர் யார்? இந்திய அணியின் பிளேயிங் 11 என்னவாக இருக்கும் என்பது குறித்து பார்க்கலாம். 

1 /12

2 /12

கே.எல். ராகுல்: முதல் டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த கே.எல். ராகுல் இப்போட்டியிலும் தொடக்க வீரராக தொடருவார் என தெரிகிறது.

3 /12

ஜெய்ஸ்வால்: அதிரடி வீரராக திகழும் ஜெய்ஸ்வால், முதல் போட்டியில் 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவர் இப்போட்டியில் ஆதிக்கம் செலுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

4 /12

சாய் சுதர்சன்: சாய் சுதர்சன் இப்போட்டியிலும் மூன்றாவது இடத்தில் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பை இந்திய அணி நிர்வாகம் வழங்கும் என தெரிகிறது. 

5 /12

சுப்மன் கில் (கேப்டன்): இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் 4வது இடத்தில் களமிறங்குவார். அவர் கடந்த போட்டியில் அரைசதம் அடித்து வெளியேறினார். 

6 /12

துருவ் ஜூரேல்: விக்கெட் கீப்பர் துருவ் ஜூரேல் கடந்த ஆட்டத்தில் சதம் அடித்து அசத்தினார். ரிஷப் பண்ட் இல்லாதபோது இந்திய டெஸ்ட் அணியில் விளையாடி வருகிறார். இப்போட்டியிலும் களமிறங்கி ரன்கள் குவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

7 /12

ரவீந்திர ஜடேஜா: அனுபவம் வாய்ந்த சுழற்பந்து வீச்சாளர், பேட்ஸ்மேன் என ஆல்- ரவுண்டராக பல ஆண்டுகளாக கலக்கி வருகிறார் ரவீந்திர ஜடேஜா. இவர் கடந்த போட்டியில் சதம் அடித்து அசத்தினார். 

8 /12

வாஷிங்டன் சுந்தர்: வாஷிங்டன் சுந்தர் வளர்ந்து வரும் ஆல்-ரவுண்டராக உள்ளார். பந்து வீச்சு மற்றும் பேட்டிங் இரண்டிலுமே இந்திய அணிக்கு உதவியாக இருப்பதால், இவரை அணியில் வைத்துக்கொள்ள நிர்வாகம் விரும்பும்.

9 /12

நிதீஷ் குமார் ரெட்டி: நிதீஷ் குமார் ரெட்டியும் வளர்ந்து வரும் ஆல் ரவுண்டராக இந்திய அணியில் வளம் வருகிறார். இவர் முகமது சீராஜ், பும்ரா போன்ற வேகப்பந்து வீச்சாளர்களுக்கு உதவியாக பந்து வீச்சில் இருக்கிறார்.

10 /12

குல்தீப் யாதவ்: தற்போது இந்திய அணியின் முக்கிய சுழற்பந்து வீச்சாளராக வழங்கி வருகிறார் குல்தீப் யாதவ். இவரும் இரண்டாவது டெஸ்ட்டில் தொடருவார். 

11 /12

பிரசித் கிருஷ்ணா: இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஓய்வு அளித்து, இந்திய அணி பிரசித் கிருஷ்ணாவை பிளேயிங் 11-க்குள் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

12 /12

முகமது சிராஜ்: சமீப காலமாக முகமது சிராஜ்  இந்திய அணியின் தவிர்க்க முடியாத வேகப்பந்து வீச்சாளராக இருந்து வருகிறார். முகமது ஷமி இல்லாததை இவர் பூர்த்தி செய்து வருகிறார் என்று கூட சொல்லலாம்.