IND vs SA ODI: இந்தியாவின் பிளேயிங் 11.. உள்ளே வரும் முக்கிய வீரர்.. CSK ருதுராஜ் இருக்கிறாரா?

Written ByR Balaji
Published: Nov 24, 2025, 04:52 PM IST|Updated: Nov 24, 2025, 04:52 PM IST

India Probable Playing XI Against South Africa ODI: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி பிளேயிங் 11 என்னவாக இருக்கும் என்பதை தெரிந்துக்கொள்வோம். 

1/12

India Probable Playing XI Against South Africa ODI: தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை நேற்று (நவம்பர் 23) பிசிசிஐ அறிவித்தது. இந்த நிலையில், பிளேயிங் 11 என்னவாக இருக்கும் என்பது குறித்து இங்கு பார்க்கலாம். 

 

2/12

ரோகித் சர்மா: இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா, தொடக்க வீரராக களமிறங்குவார். இவரது அதிரடி இந்திய அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தும். 

3/12

யஷ்யஸ்வி ஜெய்ஸ்வால்: ரோகித் சர்மாவுடன் அதிரடி வீரரான ஜெய்ஸ்வால் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர் இதுவரை ஒரே ஒரு ஒருநாள் போட்டியில் மட்டுமே விளையாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

4/12

விராட் கோலி: இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி 3வது இடத்தில் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இவரது பங்கு இந்திய அணிக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும்.

 

5/12

கே.எல். ராகுல்: இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் மற்றும் துணை கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் காயம் காரணமாக இல்லாததால், கே.எல். ராகுலுக்கு கேப்டன் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. இவர் 4வது இடத்தில் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

6/12

ரிஷப் பண்ட்: நீண்ட இடைவெளிக்கு பின்னர் ஒருநாள் அணியில் இடம் பிடித்துள்ளார் ரிஷப் பண்ட். இவர் பிளேயிங் 11ல் இடம் பிடித்து மிடில் ஆர்டரில் பலம் சேர்ப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

7/12

ரவீந்திர ஜடேஜா: ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது ஓரங்கட்டப்பட்டதால், பல மாதங்களுக்குப் பிறகு ரவீந்திர ஜடேஜா ஒருநாள் அணியில் மீண்டும் இடம்பிடித்துள்ளார். இவரது பங்கு ஒரு ஆல்ரவுண்டராக இந்திய அணிக்கு முக்கியமானது. 

8/12

வாஷிங்டன் சுந்தர் மற்றொரு சுழற்பந்து வீச்சாளர்-ஆல்ரவுண்ட் விருப்பத்தைச் சேர்த்து இந்தியாவின் கீழ் வரிசை பேட்டிங்கை வலுப்படுத்துகிறார்.  சமீபமாக இந்திய அணியில் சிறப்பாக விளையாடி வருகிறார். எனவே அவர் பிளேயிங் 11ல் இடம் பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

9/12

குல்தீப் யாதவ்: இந்திய அணியின் முக்கிய சுழற்பந்து வீச்சாளராக திகழ்பவர் குல்தீப் யாதவ். இவர் எதிரணி பேட்ஸ்மேன்களை அச்சுறுத்தும் ஒரு வீரராக இருப்பதால் நிச்சயமாக பிளேயிங் 11ல் இடம் பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 

10/12

ஹர்ஷித் ராணா: சமீபமாக இந்திய அணியில் இடம் பிடித்து வரும் ஹர்ஷித் ராணா, இத்தொடரின் பிளேயிங் 11ல் இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர் பந்து வீச்சில் ரன்களை கொடுத்தாலும் விக்கெட்களை வீழ்த்துவதால் இவரை நிர்வாகம் விரும்பும். 

11/12

பிரசித் கிருஷ்ணா: முக்கிய பந்து வீச்சாளர்களான பும்ரா, சிராஜ் ஆகியோர் இல்லாததால், பிரசித் கிருஷ்ணாவுக்கு இந்திய அணியில் இடம் கிடைத்துள்ளது. பிளேயிங் 11னிலும் இவர் இடம் பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

12/12

அர்ஷ்தீப் சிங்: இந்திய அணி முக்கிய இடது கை பந்து வீச்சாளராக திகழும் அர்ஷ்தீப் சிங், டெத் ஓவர்களில் கலக்கக்கூடியவர். புதிய பந்தை ஸ்விங் செய்து அழுத்தத்தின் கீழ் யார்க்கர்களை வீசும் அவரது திறன் அவரை வரையறுக்கப்பட்ட ஓவர்கள் கிரிக்கெட்டில் மிகவும் மதிப்புமிக்கதாக ஆக்குகிறது.