IND vs AUS: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான கடைசி டி20ஐ போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ஏற்பட உள்ள முக்கிய மாற்றங்களை இங்கு காணலாம்.
IND vs AUS 5th T20 Playing XI Prediction: சூர்யகுமார் தலைமையிலான இந்திய அணிக்கு இந்த தொடரில் ஒரு போட்டியும், அடுத்து தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 5 டி20ஐ போட்டிகளும், நியூசிலாந்துக்கு எதிராக 5 டி20ஐ போட்டிகளும் உள்ளன. அதன்பின் பிப்ரவரி - மார்ச் மாதங்களில் ஐசிசி டி20 உலகக் கோப்பை இந்தியாவில் நடைபெற உள்ளது.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான கடைசி மற்றும் ஐந்தாவது டி20ஐ போட்டி நாளை (நவ. 8) பிரிஸ்பேன் நகரில் நடைபெறுகிறது.
இந்தியா - ஆஸ்திரேலியா 5வது போட்டி இந்திய நேரப்படி மதியம் 1.45 மணிக்கு தொடங்கும். டாஸ் மதியம் 1.30 மணிக்கு வீசப்படும். ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெடவோர்க் சேனல்களிலும், ஜியோ ஹாட்ஸ்டார் தளத்திலும் போட்டியை நேரலையில் காணலாம்.
ஏற்கெனவே, இந்திய அணி தொடரில் முன்னிலை பெற்றுவிட்டது. நான்கு போட்டிகள் முடிவில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. நாளைய போட்டியை இந்தியா வென்றால் தொடரை கைப்பற்றும். ஒருவேளை தோல்வியடைந்தாலும் தொடர் சமநிலையிலேயே இருக்கும். இது இரண்டும் இந்தியாவுக்கு நன்மைதான்.
தொடரை வெல்வதை விட அனைத்து வீரர்களுக்கும் சரிசமமான வாய்ப்புகளை வழங்குவதே முக்கியம் எனலாம். முதலிரண்டு போட்டிகளில் குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா, சஞ்சு சாம்சன் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அடுத்த இரண்டு போட்டிகளில் வாஷிங்டன் சுந்தர், அர்ஷ்தீப் சிங், வாஷிங்டன் சுந்தர் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.
இந்நிலையில், நாளைய 5வது போட்டியிலும் இந்திய பிளேயிங் லெவனில் சில மாற்றங்கள் இருக்கலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த மாற்றங்கள் அனைத்தும் பரிச்சார்த்த முயற்சிகள் என்றும் ஐசிசி டி20ஐ உலகக் கோப்பையை மனதில் வைத்து இந்த மாற்றங்கள் செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
அந்த வகையில், தற்போது காயத்தில் இருந்து மீண்டு வந்திருக்கும் நிதிஷ் குமார் ரெட்டிக்கு நாளைய பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்கலாம். நிதிஷ் குமார் ரெட்டியின் முழுமையான பிட்னஸ் இதில் பொதுவெளிக்கு வந்துவிடும். நிதிஷ் குமார் ரெட்டிக்கு பதில் சிவம் தூபேவுக்கு ஓய்வு கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல், வாஷிங்டன் சுந்தருக்கு பதில் ரிங்கு சிங்கிற்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அக்சர், வருண் இருப்பதால் சுழற்பந்துவீச்சின் தேவை அதிகம் இருக்காது என்பதால் இந்த முடிவை எடுக்கலாம். ஜித்தேஷ் சர்மாவுக்கு மேலும் வாய்ப்பு வழங்கப்படும். இதனால், சஞ்சுவுக்கு கடைசி போட்டியில் வாய்ப்பில்லை.
இந்திய பிளேயிங் லெவன் (கணிப்பு): அபிஷேக் சர்மா, சுப்மான் கில், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, நிதிஷ் குமார் ரெட்டி, ரிங்கு சிங், அக்சர் பட்டேல், ஜித்தேஷ் சர்மா, வருண் சக்ரவர்த்தி, அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா