Chanakya Sayings Bad Habits Will Delay Your Success : இந்தியாவின் பழம்பெரு எழுத்தாளர், நீதியரசராக கருதப்படும் சாணக்யா, ஒருவரின் வெற்றிக்கு தடையாக இருக்கும் விஷயங்கள் குறித்து பேசியிருக்கிறார்.
Chanakya Sayings Bad Habits Will Delay Your Success : சாணக்கியர், மௌரிய பேரரசர் சந்திர குப்தரின் அதிகாரத்தின் எழுச்சிக்கு உதவியதாக கூறப்படுகிறது. சில அரசர்களின் அரசவையில் ஆலோசகராக பணியாற்றிய இவர், இந்தியாவின் பழம்பெரும் ஆசிரியர் மற்றும் எழுத்தாளராகவும் அறியப்படுகிறார். இவர், நமது வெற்றிக்கு தடையாக இருக்கும் சில விஷயங்கள் குறித்து பேசியிருக்கிறார். அவை என்னென்ன தெரியுமா?
எதிர்மறையான சிந்தனைகள்: நமக்குள் எதிர்மறையான சிந்தனைகள் வந்துவிட்டால், சவால்களை எதிர்கொள்ளும் திறன் பலவீனப்பட்டுவிடும். எனவே, அவற்றை களைய வேண்டும்.
சோம்பல்: உடல் சோம்பல், நம் இலக்கை அடைய விடாமல் தடுக்கும் விஷயமாகும். இதை தவிர்க்க, வேலைகளை பகுதிகளாக பிரித்து அதனை செய்ய வேண்டும்.
பாதுகாப்பின்மை: நம் உடல் குறித்தும், முகம் குறித்தும் நமக்குள் பல பாதுகாப்பின்மை இருக்கும். இவை, பிறருடன் நம்மை ஒப்பிட்டு பார்ப்பதாலும் எழுகிறது. எனவே, அதை செய்யாமல் இருக்க வேண்டும்.
பேராசை: பணம் குறித்து, பதவி குறித்து பலருக்கு இருக்கும் பேராசை அவர்களை மென்மேலும் வளர விடாமல் செய்யலாம். எனவே, இருப்பதை கொண்டு திருப்தியுடன் வாழ கற்றுக்கொள்ள வேண்டும்.
கோபம் கொள்வது; ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்று கூறுவர். அதன்படி, கோபம் நமக்கு வரும் பல வாய்ப்புகளை தவறவிட செய்யும். எனவே இதை கட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும்.
ஆணவம்: நமக்கு ஒரு விஷயம் தெரியவில்லை என்றால், அதை கேட்டு கற்றுக்கொள்ள ஆணவம் தடையாக இருக்கும். எனவே, அதை கழற்றி போட்டுவிட வேண்டும்.
பொறுமையின்மை: பலருக்கு ஒரு விஷயம் செய்கிறோம் என்றால், அதில் உடனடி வெற்றி கிடைத்து விட வேண்டும் என்று நினைப்பர். வெற்றி பெற, பொறுமையை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம்.