வெற்றிக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் 7 பழக்கங்கள்! சாணக்கியன் சொல்..
எதிர்மறையான சிந்தனைகள்:
நமக்குள் எதிர்மறையான சிந்தனைகள் வந்துவிட்டால், சவால்களை எதிர்கொள்ளும் திறன் பலவீனப்பட்டுவிடும். எனவே, அவற்றை களைய வேண்டும்.
சோம்பல்:
உடல் சோம்பல், நம் இலக்கை அடைய விடாமல் தடுக்கும் விஷயமாகும். இதை தவிர்க்க, வேலைகளை பகுதிகளாக பிரித்து அதனை செய்ய வேண்டும்.
பாதுகாப்பின்மை:
நம் உடல் குறித்தும், முகம் குறித்தும் நமக்குள் பல பாதுகாப்பின்மை இருக்கும். இவை, பிறருடன் நம்மை ஒப்பிட்டு பார்ப்பதாலும் எழுகிறது. எனவே, அதை செய்யாமல் இருக்க வேண்டும்.
பேராசை:
பணம் குறித்து, பதவி குறித்து பலருக்கு இருக்கும் பேராசை அவர்களை மென்மேலும் வளர விடாமல் செய்யலாம். எனவே, இருப்பதை கொண்டு திருப்தியுடன் வாழ கற்றுக்கொள்ள வேண்டும்.
கோபம் கொள்வது;
ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்று கூறுவர். அதன்படி, கோபம் நமக்கு வரும் பல வாய்ப்புகளை தவறவிட செய்யும். எனவே இதை கட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும்.
ஆணவம்:
நமக்கு ஒரு விஷயம் தெரியவில்லை என்றால், அதை கேட்டு கற்றுக்கொள்ள ஆணவம் தடையாக இருக்கும். எனவே, அதை கழற்றி போட்டுவிட வேண்டும்.
பொறுமையின்மை:
பலருக்கு ஒரு விஷயம் செய்கிறோம் என்றால், அதில் உடனடி வெற்றி கிடைத்து விட வேண்டும் என்று நினைப்பர். வெற்றி பெற, பொறுமையை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம்.