ஆத்தாடி! ஐபிஎல் சியர் கேர்ள்ஸ்க்கு வழங்கப்படும் சம்பளம் இவ்வளவா? அதுவும் ஒரு மேட்ச்சுக்கு..

Written ByYuvashree
Published: Apr 21, 2025, 12:22 PM IST|Updated: Apr 21, 2025, 12:22 PM IST

IPL 2025 Cheerleaders Salary Per Match : ஐபிஎல் கிரிக்கெட் விளையாட்டு போட்டிகளை நாம் அனைவரும் கண்டுகளிப்பதுண்டு. அவர்களுக்கு, ஒரு மேட்சுக்கு வழங்கப்படும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

IPL 2025 Cheerleaders Salary Per Match : மார்ச்-ஏப்ரல் மாதங்கள் தொடங்கி விட்டாலே, அனைவருக்கும் ஐபிஎல் ஜுரம் தொற்றிக்கொள்ளும். இந்த வருடம், சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி சொதப்பினாலும் பிற டீம்களான பஞ்சாப் கிங்க்ஸ், குஜராத் டைட்டன்ஸ் டெல்லி கேபிடல்ஸ், உள்ளிட்ட அணிகள் சிறப்பாக விளையாடி வருகின்றன. இந்த விளையாட்டுகளில் நடக்கும் சுவாரஸ்யமான சம்பவங்கள் பல இணையத்தில் வைரலாகும். அப்படி, போட்டிக்கு இடையே வீரர்கள் சிக்ஸ் அடித்தாலும் 4 அடித்தாளும் எழுந்து நடனமாடும் சியர்லீடர்ஸையும் கவனித்திருப்போம். அவர்கள், தாங்கள் கலந்துக்கொள்ளும் ஒரு போட்டிக்கு எவ்வளவு சம்பளம் பெருகிறார்கள் தெரியுமா?

சியர் லீடர்ஸ்1/7

சியர் லீடர்ஸ்

ஐபிஎல் சீசன் தொடங்கி சில வாரங்கள் ஆகிவிட்டது. இதில், எப்போதும் சூப்பராக விளையாடும் சென்னை அணி, இந்த முறை தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வருகிறது. இவர்களை தாண்டி குஜராத் டைட்டன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் ஆகிய அணிகள் முரட்டுத்தனமாக விளையாடி வருகின்றன.

சியர் லீடர்ஸ்2/7

சியர் லீடர்ஸ்

ஐபிஎல் போட்டியில் ஒரு சில வினாடிகளே கவனிக்கப்படும் சில விஷயங்களும் இணையத்தில் ட்ரெண்ட் ஆவதுண்டு. டிவியில் காட்டப்படும் அழகான பெண்களுக்கும், அவர்கள் கொடுக்கும் ரியாக்‌ஷனுக்கும் பல லட்சம் ரசிகர்கள் நொடிப்பொழுதில் கிடைத்து விடுகின்றனர். 

சியர் லீடர்ஸ்3/7

சியர் லீடர்ஸ்

இந்த ஐபிஎல் போட்டிகளில் நாம் கவனிக்க தவறாமல் இருக்கும் இன்னும் சிலர்தான், இந்த சியர் லீடர்ஸ். விவரம் தெரியாத பலர் இவர்கள் குட்டைப்பாவாடை போட்டுக்கொண்டு வீரர்கள் 6 அல்லது 4 அடித்தால் எழுந்து நடனமாடுபவர்கள் என நினைத்து கொண்டிருக்கின்றனர். 

சியர் லீடர்ஸ்4/7

சியர் லீடர்ஸ்

இவர்களுடையது வெறும் நடனம் மட்டுமல்ல, வீரர்களும்-போட்டியை காண வந்த ரசிகர்களும் துவண்டு கிடக்கும் நேரத்தில், அவர்களை உற்சாகப்படுத்துபவர்களாகவும் இவர்கள் விளங்குகின்றனர். 

சியர் லீடர்ஸ்5/7

சியர் லீடர்ஸ்

இந்த சியர்லீடர்ஸிற்கு, அவர்களின் அணியை பொறுத்து சம்பளம் வேறுபடும் என கூறப்படுகிறது. கொல்கத்தா அணி, ஒரு மேட்சுக்கு அவர்களுக்கு ரூ.24,000 சம்பளமாக வழங்குகிறதாம். அதே போல மும்பை இந்தியன்ஸ் மற்றும் பெங்களூரு ஆகிய அணிகள் ரூ.20 ஆயிரம் வரை ஒரு மேட்சின் சம்பளமாக வழங்குகிறதாம்.

சியர் லீடர்ஸ்6/7

சியர் லீடர்ஸ்

சென்னை சூப்பர் கிங்க்ஸ், பஞ்சாப் கிங்க்ஸ், ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் ஆகிய அணிகள் இவர்களுக்கு ரூ.12,000 முதல் ரூ.17,000 வரை சம்பளமாக தருவதாக கூறப்படுகிறது. 

சியர் லீடர்ஸ்7/7

சியர் லீடர்ஸ்

இவர்களுக்கு ஆடிஷன்கள் வைக்கப்பட்டு, ஃபிட்னஸ் டெஸ்ட் மற்றும் நடனத்தை பார்த்த பின்புதான் செலக்‌ஷன் நடைபெறுகிறது. இவர்களுக்கு கிடைக்கும் சம்பளத்தை தாண்டி விமான செலவு, தங்கும் செலவு ஆகியவற்றை நிர்வாகமே பார்த்துக்கொள்ளுமாம். மேலும், இவர்களுக்கு பல சமயங்களில் ஏதேனும் பிராண்டை பிரபலப்படுத்தி அதன் மூலமும் வருமானம் கிடைக்கும் என கூறப்படுகிறது.