IPL 2025: ஐபிஎல் தொடரின் 5வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதுகின்றன.
Gujarat vs Punjab: ஐபில் தொடரின் 5வது லீக் ஆட்டத்தில் இன்று குஜராத் - பஞ்சாப் அணி மோதுகின்ற நிலையில், இரு அணிகளின் பிளேயிங் 11 என்னவாக இருக்கும் என்பதையும் வெற்றி வாய்ப்பு யாருக்கு அதிகம் உள்ளது என்பதையும் பார்க்கலாம்.
இன்று (மார்ச் 25) ஐபிஎல் போட்டியில் சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதுகின்றன. இப்போட்டி குஜராத்தின் சொந்த மைதானமான அகமதாபாத், நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது.
அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தின் ஆடுகளம் எப்படி இருக்கும் என்பதை கணிப்பது கடினம். கடந்த சீசனில், டெல்லி அணிக்கு எதிராக குஜராத் அணி 89 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஹைதராபாத் அணி இரண்டு போட்டிகளில் 159 மற்றும் 162 ரன்களை எடுத்தது. ஆனால் அந்த மைதானத்தில் குஜராத் அணி 199 மற்றும் அதற்கு அதிகமான ஸ்கோர்களை மூன்று முறை எடுத்துள்ளது. அவற்றில் இரண்டு பஞ்சாப் அணியால் சேஸ் செய்யப்பட்டன. மொத்தத்தில், கடந்த 2024ல் சேஸிங் செய்த அணிகள் 8 ஆட்டங்களில் 6-ல் வெற்றி பெற்றுள்ளன.
பஞ்சாப் அணியும் குஜராத் அணியும் 5 போட்டிகள் நேருக்கு நேர் மோதி உள்ளன. அதில் 3 குஜராத் அணியும் 2 போட்டிகளில் பஞ்சாப் அணியும் வெற்றி பெற்றுள்ளன.
குஜராத் மற்றும் பஞ்சாப் மோதும் இந்த போட்டியில் 7 மணிக்கு டாஸ் வீசப்பட்டு, 7.30 மணிக்கு முதல் இன்னிங்ஸானது தொடங்கும்.
சுப்மான் கில் (கேப்டன்), ஜோஸ் பட்லர், சாய் சுதர்ஷன், ஷாருக் கான், க்ளென் பிலிப்ஸ், வாஷிங்டன் சுந்தர், ராகுல் தெவாடியா, ரஷித் கான், ககிசோ ரபாடா, முகமது சிராஜ். இம்பேக்ட் வீரர்: இஷாந்த் சர்மா/மஹிபால் லோம்ரோர்
ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), பிரப்சிம்ரன் சிங், பிரியான்ஷ் ஆர்யா, மார்கஸ் ஸ்டோனிஸ், க்ளென் மேக்ஸ்வெல், ஷஷாங்க் சிங், நேஹால் வதேரா / சூர்யன்ஷ் ஷெட்ஜ், மார்கோ ஜான்சன், ஹர்பிரீத் ப்ரார், லாக்கி பெர்குசன், அர்ஷ்தீப் சிங் இம்பேக்ட் வீரர்: யுஸ்வேந்திர சாஹல்/விஷ்ணு வினோத்.