kolkata vs Bangalore: ஐபிஎல் தொடரின் முதல் போட்டியாக மார்ச் 22ஆம் தேதி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன.
KKR vs RCB: ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 22ஆம் தேதி தொடங்கி மே 25ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதனை மிகுந்த ஆவலுடன் கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர். முதல் போட்டியில் கொல்கத்த அணியும் பெங்களூரு அணியும் மோதவுள்ள நிலையில், இரு அணிகளின் பிளேயிங் XI எப்படி இருக்கும் என்பதை இங்கு பார்க்கலாம்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதும் முதல் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டனில் நடைபெறுகிறது.
ஐபிஎல்லை பொறுத்தவரை அதிக ரசிகர்களை கொண்டுள்ள அணியில் பெங்களூரு அணி 3வது இடத்தில் உள்ளது. ஆனால் நடந்த 17 சீசன்களில் இதுவரை ஒரு சீசனில் கூட வென்றதில்லை. ஒவ்வொரு ஆண்டும் ஆர்சிபி அணி கோப்பையை வெல்லும் என அந்த அணியின் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடனும் மிகுந்த நம்பிக்கையுடனும் இருந்து வருகின்றனர். அந்த வகையில் இந்த ஆண்டு அந்த எதிர்பாப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில், இரு அணிகளின் பிளேயிங் XI எப்படி இருக்கும் என்பதை கணித்துள்ளோம். அதனை இங்கு பார்க்கலாம்.
ராஜட் பட்டிதார் (கேப்டன்), விராட் கோலி, ஃபில் சால்ட், லியாம் லிவிங்ஸ்டோன், ஜிதேஷ் சர்மா, ரசிக் தர், குர்னால் பாண்டியா, ஜோஷ் ஹேசில்வுட், புவனேஷ்வர் குமார், டிம் டேவிட், லுங்கி என்கிடி.
அஜிங்க்யா ரஹானே (கேப்டன்), குயின்டன் டி காக், ரஹ்மானுல்லா குர்பாஸ், ரிங்கு சிங், வெங்கடேஷ் ஐயர், ஆண்ட்ரே ரஸ்ஸல், சுனில் நரைன், அன்ரிச் நார்ட்ஜே, வருண் சக்கரவர்த்தி, மொயின் அலி, உம்ரான் மாலிக்.
ஆர்சிபி அணி சுயாஷ் சர்மா, தேவ்தத் படிக்கல், ஸ்வப்னில் சிங் ஆகியோரை இம்பாக்ட் பிளேயராக களம் இறக்கலாம்.
கேகேஆர் அணி மனிஷ் பாண்டே, வைபவ் அரோரா அல்லது அனுகுல் ராய் ஆகியோரை இம்பாக்ட் பிளேயராக களம் இறக்க வாய்ப்புள்ளது.