IPL 2025: 10 ஐபிஎல் அணிகளின் அதிரடி ஓப்பனர்கள் யார் யார்? பட்டையை கிளப்பும் லிஸ்ட்!

IPL 2025: ஐபிஎல் 2025 தொடரில் 10 அணிகளின் ஓப்பனிங் வீரர்கள் யார் யாராக இருப்பார்கள் என்பதை இங்கு தெரிந்துகொள்ளலாம்.

Indian Premier League: ஐபிஎல் கிரிக்கெட் தொடர் உலகிலேயே மிகப்பெரிய டி20 தொடராகும். இதனை கைப்பற்ற வேண்டும் என்றால் ஓப்பனிங் மிரட்டலாக இருக்க வேண்டும். அதுவும் பவர்பிளே ஓவரில் பவுண்டரிகளை பறக்கவிடும் வல்லமைப் படைத்தவர்களாகவும் இருக்க வேண்டும்.

1 /10

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (LSG): இங்கு புதுவிதமான காம்பினேஷனை நிச்சயம் எதிர்பார்க்கலாம். தற்போதைய சூழலில், எய்டன் மார்க்ரம் மற்றும் மிட்செல் மார்ஷ் இருவரும்தான் ஓப்பனிங்கில் களமிறங்குவார்கள் எனலாம்.

2 /10

பஞ்சாப் கிங்ஸ் (PBKS): பிரப்சிம்ரன் சிங் ஓப்பனிங்கில் இறங்குவது உறுதி. அவருடன் எந்த வெளிநாட்டு வீரர் இறங்குவார் என்பதே பெரிய கேள்வியாக இருக்கிறது. மார்கஸ் ஸ்டாய்னிஸ், ஜாஷ் இங்கிலிஸ் இருவரில் ஒருவர் ஓப்பனிங் வர அதிக வாய்ப்புள்ளது.

3 /10

டெல்லி கேப்பிடல்ஸ் (DC): பிரேசர் மெக்கர்க் கடந்தாண்டு சிறப்பாக விளையாடிய காரணத்தால் தொடக்க கட்ட போட்டிகளில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம். கேஎல் ராகுல் நிச்சயம் ஓப்பனிங்தான். அவருக்கு குழந்தை பிறந்திருப்பதால் ஓரிரு போட்டிகளை தவறவிடலாம். அப்போது அவருக்கு பதில் ஃபாப் டூ பிளெசிஸ் விளையாட வாய்ப்புள்ளது.

4 /10

குஜராத் டைட்டன்ஸ் (GT): சுப்மன் கில் மற்றும் ஜாஸ் பட்லர் ஆகியோரே நிச்சயம் ஓப்பனிங்கில் இறங்குவார்கள்.

5 /10

ராஜஸ்தான் ராயல்ஸ் (RR): சஞ்சு சாம்சன் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர்தான் ராஜஸ்தான் அணியின் பிரதான ஓப்பனிங் வீரர்கள்.

6 /10

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH): சந்தேகமே வேண்டாம்... இந்தாண்டும் சிக்ஸர்களை பறக்கவிட டிராவிஸ் ஹெட் - அபிஷேக் சர்மா ஜோடி தயாராக இருக்கும்.

7 /10

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR): சுனில் நரைன் ஓப்பனிங்கில் செட்டிலாகிவிட்டார். தற்போது அவருடன் குயின்டன் டி காக்கும் இணைந்துவிடுவார்.

8 /10

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB): விராட் கோலியுடன் இந்தாண்டு கைக்கோர்க்க இருப்பவர் பில் சால்ட். பில் சால்ட் கடந்தாண்டு கொல்கத்தாவுக்கு சிறப்பான ஓப்பனிங்கை அளித்ததை போன்று, இந்தாண்டு ஆர்சிபிக்கும் அளித்தால் நிச்சயம் வெற்றி வாகை சூடலாம்.

9 /10

மும்பை இந்தியன்ஸ் (MI): ரோஹித் சர்மாவுடன் இந்தாண்டு ரியான் ரிக்கில்டன் களமிறங்குவார் எனலாம். வில் ஜாக்ஸிற்கும் வாய்ப்புள்ளது.

10 /10

சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK): கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கடந்தாண்டை போல் இல்லாமல், இந்தாண்டு நிலையாக ஓப்பனிங்கில் விளையாடியாக வேண்டும். ருதுராஜ் உடன் கான்வே அல்லது ரச்சின் களமிறங்குவார்கள்.