மினி ஏலத்தில் கோடிகளை குவிக்கப்போகும் 7 சுழற்பந்துவீச்சாளர்கள்... காத்திருக்கும் CSK

Written BySudharsan G
Published: Nov 20, 2025, 04:01 PM IST|Updated: Nov 20, 2025, 04:01 PM IST

IPL 2026 Mini Auction: ஐபிஎல் மினி ஏலத்தில் அதிக தொகைக்கு இந்த எடுக்கப்பட வாய்ப்புள்ள முன்னணி சுழற்பந்துவீச்சாளர்கள் யார் யார் என்பதை இங்கு காணலாம்.

IPL 2026 Mini Auction: ஐபிஎல் மினி ஏலத்தில் வீரர்கள் அதிக தொகைக்கு ஏலம் போவார்கள். காரணம், வீரர்களின் தேவை அணிகளுக்கு அதிகம் இருக்கும், ஆனால் வீரர்களின் எண்ணிக்கையோ ஏலத்தில் தேவைக்கு ஏற்ப இருக்காது. டிமாண்ட் அதிகம் இருந்து சப்ளை குறைவாக இருந்தால் விலை அதிகரிப்பது இயல்பு. அதனாலேயே மினி ஏலத்தில் வீரர்களுக்கு கோடிகள் கொட்டும்.

ஐபிஎல் மினி ஏலம் 20261/8

ஐபிஎல் மினி ஏலம் 2026

வரும் டிசம்பர் 16ஆம் தேதி அபுதாபியில் நடைபெற இருக்கும் மினி ஏலத்தில், அதிக தொகைக்கு எடுக்கப்பட வாய்ப்புள்ள 7 சுழற்பந்துவீச்சாளர்கள் இங்கு பார்க்கலாம்.

ஐபிஎல் மினி ஏலம் 20262/8

ஐபிஎல் மினி ஏலம் 2026

தனுஷ் கோட்டியான்: மும்பை அணியின் ஆப் ஸ்பின்னரான இவர் உள்நாட்டு கிரிக்கெட்டில் சிவப்பு பந்து போட்டிகளில் தனி முத்திரை பதித்திருக்கிறார். இவர் பேட்டிங்கிலும் ரன்களை குவித்திருக்கிறார். சிஎஸ்கே உள்ளிட்ட சுழற்பந்துவீச்சு ஆல்-ரவுண்டரை தேடும் அணிகள் இவர் டார்கெட் செய்யலாம். 

ஐபிஎல் மினி ஏலம் 20263/8

ஐபிஎல் மினி ஏலம் 2026

சரண்ஷ் ஜெயின்: இந்தியாவில் தற்போதைக்கு சிறந்த ஆப் ஸ்பின்னரின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. தனுஷ் கோட்டியான் வரிசையில் சரண்ஷ் ஜெயினும் ஒருவர். இவர் மத்திய பிரதேச அணிக்காக சிறப்பாக விளையாடி வருகிறார். 

ஐபிஎல் மினி ஏலம் 20264/8

ஐபிஎல் மினி ஏலம் 2026

ராகுல் சஹார்: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இவரை தக்கவைக்கவில்லை. லெக் ஸ்பின்னரான இவர் ஐபிஎல் தொடரில் 79 போட்டிகளில் 75 விக்கெட்டை வீழ்த்தி உள்ளார். இவரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி குறிவைக்கும். 

ஐபிஎல் மினி ஏலம் 20265/8

ஐபிஎல் மினி ஏலம் 2026

ஜார்ஜ் லிண்டே: இப்போது இடது கை சுழற்பந்துவீச்சு ஆல்-ரவுண்டருக்கு பெரிய டிமாண்ட் உள்ளது. தென்னாப்பிரிக்க வீரரான லிண்டே ஓடிஐ மற்றும் டி20ஐ போட்டிகளில் கலக்கி வருகிறார். பேட்டிங்கிலும் சிறப்பாக விளையாடுகிறார்.

ஐபிஎல் மினி ஏலம் 20266/8

ஐபிஎல் மினி ஏலம் 2026

அகேல் ஹூசைன்: மேற்கு இந்திய தீவுகள் அணியை சேர்ந்த இவரும் இடது கை சுழற்பந்துவீச்சாளர். அதிரடியாக சிக்ஸர்களை பறக்கவிடும் திறன்கொண்டவரும் ஆவார். இவர் MLC, SA20 தொடர்களில் சூப்பர் கிங்ஸின் அணிகளுக்காக விளையாடி வருகிறார். இந்த மினி ஏலத்தில் சிஎஸ்கே இவரை எடுக்கலாம். இவர் பவர்பிளே ஓவர்களிலும் பந்துவீசக்கூடியவர். 

ஐபிஎல் மினி ஏலம் 20267/8

ஐபிஎல் மினி ஏலம் 2026

வனிந்து ஹசரங்கா: ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இவரை மினி ஏலத்திற்கு கழட்டிவிட்டுள்ளது. அந்த அணியின் காம்பினேஷனுக்கு சரிபட்டு வரமாட்டார் என விடுவிக்கப்பட்டுள்ளார். இலங்கை வீரரான இவர் ஆல்-ரவுண்டராக வலம் வருகிறார். 

ஐபிஎல் மினி ஏலம் 20268/8

ஐபிஎல் மினி ஏலம் 2026

ரவி பிஷ்னோய்: லக்னோ அணி இவரை விடுவிக்கும் என பலரும் எதிர்பார்க்கவில்லை. கடந்த மெகா ஏலத்தில் இவரை ரூ.11 கோடிக்கு லக்னோ அணி தக்கவைத்திருந்தது. தற்போது மினி ஏலத்தில் பல அணிகள் இவருக்கு கோடிகளை கொட்டும். சுழற்பந்துவீச்சாளர்களில் இவருக்கு அதிக தொகை கிடைக்கலாம்.