IPL 2026: ஐபிஎல் 2026 சீசனில் ராகுல் டிராவிட் இந்த 3 அணிகளில் ஏதாவது ஒன்றில் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
1/8ராகுல் டிராவிட் கடந்த 2024 டி20 உலகக் கோப்பையை வென்ற பிறகு, இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
2/8ராகுல் டிராவிட் அதற்கு பின் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்றார். அவருக்கு காலில் காயம் ஏற்பட்டிருந்தபோதும், அவர் கட்டுப்போட்டு வீரர்களுக்கு பயிற்சியளித்தார், போட்டி நடைபெறும் அனைத்து மைதானங்களுக்கும் அவர் பயணித்தார்.
3/8இருப்பினும், ராகுல் டிராவிட் தற்போது ஒரே வருடத்தில் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டார். அவருக்கு அணியில் உயரிய பொறுப்பு வழங்கப்பட்டதாகவும், அதை மறுத்ததால் அவர் விடுவிக்கப்பட்டதாக ஆர்ஆர் தெரிவித்தது. 2025இல் ராஜஸ்தான் 9வது இடத்தில் நிறைவு செய்தது குறிப்பிடத்தக்கது.
4/8ஆனால், அவருக்கு என்ன பொறுப்பு கொடுக்கப்பட்டது என்பது தெளிவாக தெரிவிக்கப்படவில்லை. அதேநேரத்தில், ஆர்ஆர் அணி இன்னும் அதன் புதிய தலைமை பயிற்சியாளரை அறிவிக்கவில்லை. மீண்டும் சங்கக்காராவையே கொண்டுவருமா அல்லது புதிய பயிற்சியாளரை அறிவிக்குமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
5/8அந்த வகையில், ராகுல் டிராவிட் இந்த 3 அணிகளில் ஏதாவது ஒன்றில் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. மினி ஏலத்திற்கு முன்னர் இந்த அறிவிப்பு வர வாய்ப்புள்ளது. அந்த வகையில், ராகுல் டிராவிட்டை குறிவைக்கும் அந்த 3 அணிகளை இங்கு காணலாம்.
6/8டெல்லி கேப்பிடல்ஸ்: இந்த அணியும் கடந்தாண்டுதான் புதிய தலைமை பயிற்சியாளரை அறிவித்தது. ஹேமங் பதானிக்கு அனுபவம் குறைவு என்பதால் ராகுல் டிராவிட்டை டெல்லி உள்ளே கொண்டு வர நினைக்கும்.
7/8கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: கேகேஆர் அதன் தலைமை பயிற்சியாளர் சந்திரகாந்த் பண்டிட்டை 2025 சீசனுக்கு பின் நீக்கியது. எனவே இந்த அணிக்கும் இப்போது பயிற்சியாளர் தேவை. ராகுல் டிராவிட் அவர்களுக்கு சரியான தேர்வாக இருக்கும். ஒருவேளை, சஞ்சு சாம்சன் மினி ஏலத்தில் வந்தால் கேகேஆர் நிச்சயம் அவரை எடுக்கும். கேகேஆர் அணிக்கு விக்கெட் கீப்பர் பேட்டர் மற்றும் கேப்டன் தேவை இருக்கிறது. எனவே மீண்டும் ராகுல் - சாம்சன் காம்போவை பார்க்கலாம்.
8/8லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்: ஜஸ்டின் லாங்கர் இந்த அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கிறார். ஜாகிர் கான் ஆலோசகர் பொறுப்பில் உள்ளார். எனவே ஜாகிர் கானுடன் இணைய ராகுல் டிராவிட் சரியான தேர்வாக இருப்பார்.