வாஷிங்டன் சுந்தர் டிரேட் செய்யப்பட்டால்... இந்த 3 அணிகள் கடுமையாக போட்டிப்போடும்!

Written BySudharsan G
Published: Jul 30, 2025, 01:31 PM IST|Updated: Jul 30, 2025, 01:31 PM IST

IPL 2026 Trading: குஜராத் டைட்டன்ஸ் அணி வாஷிங்டன் சுந்தரை டிரேட் செய்தால் நிச்சயம் இந்த 3 அணிகள் அவருக்காக போட்டிப்போடும். அந்த 3 அணிகளை இங்கு காணலாம்.

Washington Sundar Trade: ஐபிஎல் தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் வீரர்களில் வாஷிங்டன் சுந்தரும் ஒருவர். ஆனால் அவருக்கு தொடர்ச்சியாக வாய்ப்புகள் கிடைப்பதில்லை. தற்போது இருக்கும் குஜராத் அணியிலும் அதுதான் நிலைமை. அப்படியிருக்க, அவர் பிற அணிக்குச் செல்வதே அவருக்கு சரியாக இருக்கும்.

ஐபிஎல் 2026 டிரேடிங்1/8

ஐபிஎல் 2026 டிரேடிங்

வாஷிங்டன் சுந்தர் (Washington Sundar) இந்தியாவின் தற்போதைய நட்சத்திர ஆல்-ரவுண்டராக உருவெடுத்துள்ளார். டெஸ்டில் மட்டும் தற்போது தனது இடத்தை நிலைநாட்டியிருக்கும் வாஷிங்டன் சுந்தர், வெள்ளைப் பந்தில் இன்னும் இடத்தை உறுதிசெய்யவில்லை எனலாம். 

 

ஐபிஎல் 2026 டிரேடிங்2/8

ஐபிஎல் 2026 டிரேடிங்

கௌதம் கம்பீருக்கு ஆல்ரவுண்டர்கள் மீது இருக்கும் நாட்டமும், அதைவிட வாஷிங்டன் சுந்தர் பேட்டிங் மீதான நாட்டமும் அதிகம் என்பதால் இனி வருங்காலத்தில் 25 வயதான வாஷிங்டன் சுந்தருக்கு இந்திய அணியில் அதிக வாய்ப்பு கிடைக்கும் எனலாம். 

 

ஐபிஎல் 2026 டிரேடிங்3/8

ஐபிஎல் 2026 டிரேடிங்

இந்திய அணியில் மட்டுமின்றி இவரை ஐபிஎல் அணிகள் பெரிதாக பயன்படுத்தவில்லை என்றுதான் கூற வேண்டும். 2017ஆம் ஆண்டில் ரைஸிங் புனே சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்காக அறிமுகமானார் வாஷிங்டன் சுந்தர். 

 

ஐபிஎல் 2026 டிரேடிங்4/8

ஐபிஎல் 2026 டிரேடிங்

அதன் பின், ஆர்சிபி அணி 2018 முதல் 2021 வரையிலும், எஸ்ஆர்ஹெச் அணியில் 2022 முதல் 2024 வரையிலும் விளையாடினார். 2025இல் அவர் குஜராத் அணியில் விளையாடினார். ஒட்டுமொத்தமாக வாஷிங்டன் சுந்தர் ஐபிஎல் தொடரில் 66 போட்டிகளில் விளையாடி 511 ரன்களையும், 39 விக்கெட்டுகளையும் எடுத்திருக்கிறார்.  

 

ஐபிஎல் 2026 டிரேடிங்5/8

ஐபிஎல் 2026 டிரேடிங்

2025 சீசனில் வெறும் 6 போட்டிகளில் மட்டுமே குஜராத் டைட்டன்ஸ் (GT) அவரை விளையாட வைத்தது. அதிலும் அவர் பெரியளவில் சொதப்பவில்லை, அதேநேரத்தில், பெரியளவில் பந்துவீசும் வாய்ப்பும் கொடுக்கவில்லை. அப்படியிருக்க, அவரை குஜராத் அணி டிரேட் செய்து தங்களுக்கு ஏற்ற மிடில் ஆர்டர் பேட்டரை எடுத்துக்கொள்ளலாம். இவரை குஜராத் ரூ.3.20 கோடிக்கு ஏலத்தில் எடுத்த நிலையில், இவரை டிரேட் செய்தால் நிச்சயம் இந்த 3 அணிகள் போட்டிப்போடும் எனலாம். 

 

ஐபிஎல் 2026 டிரேடிங்6/8

ஐபிஎல் 2026 டிரேடிங்

சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK): சிஎஸ்கேவில் ஜடேஜா, நூர் அகமது ஆகியோருடன் வாஷிங்டன் சுந்தர் வந்தால் புதிய பந்தில் பந்துவீசவும் பந்துவீச்சாளர் கிடைக்கும், கீழ் வரிசையில் பேட்டிங் செய்யவும் நல்ல பேட்டர் கிடைப்பார் எனலாம். அஸ்வின் இடத்தை சிஎஸ்கேவிலும் இவரால் நிரப்ப முடியும். 

 

ஐபிஎல் 2026 டிரேடிங்7/8

ஐபிஎல் 2026 டிரேடிங்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB): ஆர்சிபியில் இவர் ஏற்கெனவே 4 ஆண்டுகள் இருந்திருக்கிறார். லியம் லிவிங்ஸ்டன் போன்ற ஒருவரை பிளேயிங் லெவனில் வைப்பதற்கு வாஷிங்டனை அந்த இடத்தில் விளையாட வைக்கலாம். வேறு இடத்தில் ஒரு வெளிநாட்டு வீரரை பயன்டுத்தலாம். பவர்பிளே பந்துவீச்சிலும் வாஷிங்டன் சுந்தர் கைக்கொடுப்பார். 

 

ஐபிஎல் 2026 டிரேடிங்8/8

ஐபிஎல் 2026 டிரேடிங்

டெல்லி கேப்பிடல்ஸ் (DC): டெல்லி அணிக்கு மிடில் ஆர்டரில்தான் பிரச்னை. கேஎல் ராகுல் ஓபனிங்கில் இறங்கினால் மிடில் ஆர்டரில் வாஷிங்டன் சுந்தரை முயற்சிக்கலாம். வாஷிங்டன் சுந்தர் தனது பேட்டிங் திறனை முழுமையாக வெளிப்படுத்த டெல்லி அணிதான் சிறந்தது எனலாம்.