Tirupati Tour: திருப்பதிக்கு சுற்றுலா..சிறப்பு தரிசனத்தோடு அசத்தலான டூர் பேக்கேஜ்

Written ByVijaya Lakshmi
Published: Jul 20, 2025, 04:31 PM IST|Updated: Jul 20, 2025, 04:31 PM IST

Tirupati Balaji Tour Package: ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள மிகவும் பிரபலமான கோயில்களில் திருப்பதி ஒன்றாகும். இந்த கோவில் திருப்பதி திருமலையில் அமைந்துள்ளது

திருப்பதி பாலாஜியைப் பார்வையிட விரும்பினால், ஐஆர்சிடிசி உங்களுக்காக சிறந்த சுற்றுலாத் தொகுப்பைக் கொண்டு வந்துள்ளது. அதைப் பற்றிய முழுமையான தகவல்களை இப்போது தெரிந்துக் கொள்வோம்.

1/7

உலக பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்றான திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு ஆந்திரா, தெலங்கானா, கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு வெளி மாநிலங்களில் இருந்து தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். 

2/7

திருமலைக்கு வரும் பக்தர்கள் முன்கூட்டியே ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளும் வசதி உள்ளது. குறைந்தது 2 முதல் 3 மாதங்கள் முன்பே டிக்கெட் புக்கிங் செய்து தான் தயாராக இருக்க வேண்டும் என்கிற நிலை இருக்கிறது.

3/7

Tirupati Balaji Tour Package: ஐஆர்சிடிசி தற்போது திருப்பதி தொகுப்பு சுற்றுலா திட்டத்தின் மூலம் சிறப்பு தரிசன அனுமதி சீட்டின் மூலம் சுற்றுலா செல்லலாம்

4/7

Tirupati Balaji Tour: ஐ.ஆர்.சி.டி.சியின் இந்த திருப்பதி பாலாஜி சுற்றுலா தொகுப்பில், உங்களுக்கு உணவு மற்றும் தங்குமிட வசதிகள் வழங்கப்படும்.

5/7

Tirupati Balaji Tour Cost: இந்தப் பயணத் தொகுப்புக்கு நீங்கள் ரூ.7250 செலுத்த வேண்டும். இந்தப் பயணம் 3 இரவுகள் மற்றும் 4 பகல்களைக் கொண்டதாக இருக்கும்.

6/7

South India Famous Temples: இந்த சுற்றுலா தொகுப்பில், வெங்கடேஸ்வரர் (திருப்பதி கோயில்), ஸ்ரீ காளஹஸ்தி கோயிலுக்குச் செல்லும் வாய்ப்பு உங்களுக்குக் கிடைக்கும்.

7/7

IRCTC சுற்றுலா தொகுப்பு: IRCTC-யின் இந்த சுற்றுலா தொகுப்பு பற்றி விரிவாக அறிய, https://irctctourism.com/pacakage_description?packageCode=SHR005A என்ற இணையதளத்தைப் பார்வையிட்டு முழுமையான தகவல்களைப் பெறலாம்.