கம்மி விலையில் கேரளாவுக்கு 7 நாள் டூர்! குடும்பத்துடன் செல்ல செம சான்ஸ்.. IRCTC சூப்பர் பேக்கேஜ்

IRCTC Kerala Tour Package: குறைந்த செலவில் ஐஆர்சிடிசி கேரளாவுக்கு சுற்றுலா திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பேக்கேஜில் உணவு,  பயண கட்டணம் அனைத்தும் இடம்பெற்றிருக்கும். 

 

IRCTC Kerala Tour Package Latest Update: இந்த பேக்கேஜில் 7 நாள் வரை நீங்கள் கேரளாவில் சுற்றி பார்க்கலாம். கேரளா சுற்றுலா மார்ச் 22ஆம் தேதி  துவங்குகிறது. எனவே, இதில் எப்படி புக் செய்யலாம் என்பது குறித்து பார்ப்போம். 

 

1 /7

ஐஆர்சிடிசி எனும் இந்தியன் ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் பல்வேறு சுற்றுலா தொகுப்புகளை அறிமுகப்படுத்தி வருகிறது. ஆன்மீக சுற்றுலா மற்றும் பல்வேறு மாநிலங்கள், வெளிநாடுகளுக்கு சுற்றுலா தொகுப்புகளை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில்,  தற்போது கேரளாவுக்கு சுற்றுலா திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.   

2 /7

உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து கேரளாவுக்கு சுற்றுலா மேற்கொள்வீர்கள்.  இந்த சுற்றுலா திட்டம் மூலம் 7 நாட்கள் கேரளாவை சுற்றி பார்ப்பீர்க்ள.  இந்த சுற்றுலா தொகுப்பு மார்ச் 22ஆம் தேதி முதல் மார்ச் 28ஆம் தேதி வரை இருக்கும். எனவே, மார்ச் மாதத்தில் நீங்கள் கேரளா செல்ல நல்ல வாய்ப்பாக இருக்கும்.   

3 /7

இந்த சுற்றுலா தொகுப்பில் கொச்சி, முணாறு, தேக்கடி, குமரகம், திருவனந்தபுரம் ஆகிய இடங்களுக்கு செல்வீர்கள். கேளராவுக்கு லக்னோ விமான நிலையத்தில் இருந்து கேரளாவுக்கு செல்வீர்கள். இந்த தொகுப்பில் விமான கட்டணம், மூன்று நட்சத்திர ஹோட்டலில் உண்வு, தங்குமிடம் ஆகிய இடம்பெற்றிருக்கும்.  

4 /7

 இந்த சுற்றுலாவில் ஃபோர்ட் கொச்சி, சீயப்பாரா நீர்வீழ்ச்சி, புனர்ஜனி  கலாச்சார நிகழ்ச்சி, எக்கோ பாயிண்ட், ஆலப்புழா கடற்கரை, பத்நாத சுவாமி, குண்டலா அணை, மேட்டுப்பட்டி அணை, தேசிய பூங்கா உள்ளிட்ட இடங்களை சுற்றி பார்ப்பீர்கள்.   

5 /7

7 நாளுக்கான சுற்றுலா திட்டத்திற்கு ஒரு நபருக்கு கட்டணமான ரூ.78,000, இரண்டு பேருக்கு ரூ.55,200, மூன்று நபருக்கான கட்டணம் ரூ.52,400, பெற்றோருடன் தங்கும் குழந்தைக்கு படுக்கையுடன் ரூ.45,900, படுக்கை இல்லாமல் ரூ.39,500 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.   

6 /7

கேரளா சுற்றுலா தொகுப்பில் முன்பதிவு செய்ய ஐஆர்சிடிசி இணையதளம் அல்லது செயலி வாயிலாக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய வேண்டும். மேலும், கூடுதல் தகவல் தேவைப்பட்டால் 8287930911/9236391911/8287930902  ஆகிய எண்களை தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.  

7 /7

எனவே, மார்ச் மாதத்தில் கேரளாவுக்கு குடும்பத்துடன் சுற்றுலா செல்ல விருப்பப்படுபவர்கள் இந்த சுற்றுலா தொகுப்பில் செல்லலாம். மார்ச் மாதத்தில் ஹோலி விடுமுறை வரும் நிலையில், அந்த விடுமுறை நாட்களில் கேரளா செல்ல திட்டமிடலாம்.