வர்ணனையாளர் பொறுப்பிலிருந்து இர்ஃபான் பதான் நீக்கம்? காரணம் இதுதான்!

Irfhan Pathan: ஐபிஎல் 2025ன் வர்ணனையாளர் பொறுப்பிலிருந்து முன்னாள் இந்திய அணியின் வீரர் இர்ஃபான் பதான் நீக்கப்பட்டுள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

1 /6

ஐபிஎல் 2025ன் 18வது சீசன் தற்போது தொடங்கி உள்ளது. உலக அளவில் அனைவராலும் பார்க்கப்படும் இந்த தொடர் பல்வேறு இந்திய மொழிகளில் ஒளிபரப்பாகிறது.

2 /6

ஒவ்வொரு இந்திய மொழியிலும், இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் தொடங்கி, சினிமா நட்சத்திரங்கள் மற்றும் பல்வேறு பிரபலங்கள் வர்ணனையாளர் குழுவில் இடம் பெற்றுள்ளனர்.

3 /6

இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் இர்பான் பதான், ஓய்வு பெற்றது முதல் பல ஆண்டுகளாக வர்ணனையாளர் பொறுப்பில் இருந்து வருகிறார். ஹிந்தி மொழியில் வர்ணனையாளராகப் பணியாற்றி வருகிறார்.

4 /6

இந்நிலையில் இந்த ஐபிஎல் தொடரின் வர்ணனையாளர் பொறுப்பில் இருந்து இர்பான் பதான் நீக்கப்பட்டுள்ளார் என்று தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

5 /6

சில வீரர்கள் மீது உள்ள தனிப்பட்ட பகையை இர்ஃபான் தனது வர்ணனையின் போது காட்டுகிறார் என்று குற்றசாட்டு அவர் மீது எழுந்துள்ளது. கிரிக்கெட் வீரர்கள் மீது வெறுப்பை காட்டுவதால் அவர் நீக்கப்பட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.  

6 /6

இதற்கு முன்பு சஞ்சய் மஞ்ச்ரேக்கர் இதே காரணத்திற்காக வர்ணனையாளர் குழுவிலிருந்து சில ஆண்டுகள் நீக்கப்பட்டார். ஹர்ஷா போக்லேவும் சில காரணங்களுக்காக வர்ணனையாளர் குழுவிலிருந்து இதற்கு முன்பு நீக்கப்பட்டுள்ளார்.