செருப்பு போட்டு கார் ஓட்டினால் தவறா...? அபராதம் விதிக்கப்படுமா...?

செருப்பு அணிந்து கார், லாரி போன்ற வாகனங்களை ஓட்டினால் அபராதம் விதிக்கப்படுமா இல்லையா என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கிறது. இதுகுறித்த விதியை அறிய இதில் பார்க்கவும்.

மோட்டார் வாகன சட்டத்தின்படி விதிக்கப்பட்டுள்ள விதிகளை மீறினால், போக்குவரத்து காவல்துறையினரால் அபராதம் விதிக்கப்படும். அந்த வகையில், செருப்பு அணிந்து கார் ஓட்டுவது அபராதத்திற்குரிய விதிமீறலா என்பதை இங்கு அறியலாம்.

1 /8

கார், பைக் போன்ற வாகனங்களை ஓட்டும்போது சாலை விதிகளை முறையாக பின்பற்றி, சக வாகன ஓட்டிகளுக்கு ஆபத்து விளைவிக்காமல் பாதுகாப்பாக ஓட்டுவது முக்கியமாகும். அதாவது கவனமாகவும், பொறுப்புணர்வுடனும் வாகனங்களை இயக்க வேண்டும்.   

2 /8

சாலை விதிகளை மீறுவது தண்டைக்குரிய ஒன்றாகும், அதற்கு அபராதமும் விதிக்கப்படும். அதேபோல், சில விதிகளை மக்கள் தவறாக புரிந்துகொள்கிறார்கள். இதனால், பெரும் குழப்பமே ஏற்படுகிறது.  

3 /8

அந்த வகையில், கார் ஓட்டும் போது செருப்பு அணிந்து ஓட்டினால் போக்குவரத்து காவல்துறையினர் அபராதம் விதிப்பார்கள் என கூறப்படுகிறது. ஆனாலும், இது உண்மையா, பொய்யா என்பது பலருக்கும் குழப்பத்தையே தருகிறது.   

4 /8

இந்த விதி குறித்து இங்கு முழுமையாக காணலாம். முதலில், இப்படி ஒரு விதியே இல்லை, நீங்கள் செருப்பு அணிந்து காட்டினால் அபராதம் விதிக்கப்படும் என்பது முற்றிலும் தவறானதாகும்.   

5 /8

இதுகுறித்து கடந்த 2019ஆம் ஆண்டே மத்திய அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி 2019ஆம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதி பதிவிட்ட ட்வீட்டில்,"செருப்பு அணிந்து வாகனம் ஓட்டினால் அபராதம் விதிக்கப்படுவதற்கு மோட்டார் வாகனச் சட்டத்தின்படி எவ்வித முகாந்திரமும் இல்லை" என குறிப்பிட்டிருந்தார்.  

6 /8

இதன்மூலம், ஒருவேளை நீங்கள் செருப்பு அணிந்து கார் ஓட்டினால் அபராதம் விதிக்கப்படாது என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.   

7 /8

இருப்பினும், சில பாதுகாப்பு காரணங்களுக்காக முறையான ஷூக்களை அணிந்து கார் ஓட்டுவதே சிறந்தது எனலாம்.  

8 /8

கார்களில் பெடல் உங்கள் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்றால் சௌகரியமான ஷூக்களை அணிந்துகொள்வதால் உங்களால் எளிதாக வாகனத்தை இயக்க முடியும். அவை அசௌகரியமாக இருந்தால் வெறுங்காலில் கூட காரை இயக்கலாம்.