உடலுறவின் போது 2 காண்டம் போடுவது... ரொம்ப நல்லதா?

Health Tips: உடலுறவு மேற்கொள்ளும் போது இரண்டு ஆணுறைகளை பயன்படுத்துவது கூடுதல் பாதுகாப்பு தருமா என்ற கேள்வி பலருக்கும் இருக்கிறது. இதுகுறித்த விளக்கத்தை இங்கு காணலாம். 

Condoms Usage For Safe Intercourse: பாதுகாப்பான உடலுறவுக்கு ஆணுறையை பயன்படுத்துவது அவசியமாகும். குழந்தை பிறப்பை தடுப்பதற்கு மட்டுமின்றி பால்வினை நோய்களில் இருந்து தற்காத்துக்கொள்வதும் அவசியமாகும்.   

 

 

1 /8

ஆணுறை (Condom) அணிந்துகொண்டு உடலுறவு மேற்கொள்வது என்பது குழந்தை பிறப்பை தடுப்பதற்கு மட்டுமின்றி பல்வேறு பால்வினை நோய்களில் இருந்து உங்களை பாதுகாத்துக்கொள்வதற்கும் உதவும் எனலாம். (Image Source: Meta AI)

2 /8

அதாவது, லேடெக்ஸ் (Latex) அல்லது பாலியூரிதீன் (polyurethane) போன்ற பிற மூலப்பொருள்களால் ஆணுறை தயாரிக்கப்படுகிறது. இது தோல் மற்றும் தோல் உரசுவதை தடுக்கும், இதனால் நோய் தொற்று ஏற்படாது. (Image Source: Meta AI)

3 /8

பெரும்பாலான ஆணுறைகள் லேட்டகஸால் தயாரிக்கப்பட்டவையே. லேட்டக்ஸ் அலர்ஜி இருப்பவர்கள் பாலியூரிதீன் போன்ற பொருள்களால் தயாரிக்கப்பட்ட ஆணுறைகளை பயன்படுத்தலாம். ஆணுறுப்பு விறைப்புத்தன்மையில் இருக்கும்போது, அதனை முழுவதும் மறைக்கும் வகையில் அணிந்துகொள்ள வேண்டும். இதனால், பார்ட்னரின் பெண்ணுறுப்பில் விந்தணு நுழையாதவாறு பார்த்துக்கொள்ளும். (Image Source: Meta AI)

4 /8

ஆணுறை அணிவதில் பலருக்கும் தயக்கம் இருந்தது என்றாலும், தற்போது கடுமையான விழிப்புணர்வு காரணமாக அதன் பயன்பாடு அதிகரித்துள்ளது. ஆணுறைகள் தற்போது பல்வேறு வகைகளிலும் கிடைக்கிறது. (Image Source: Meta AI)

5 /8

அந்த வகையில், சில பேர் இரண்டு ஆணுறைகளை ஒரே நேரத்தில் பயன்படுத்துவது நல்லது என்ற நினைப்பு பலருக்கும் இருக்கிறது. ஆனால் இது தவறான புரிதல் ஆகும். (Image Source: Meta AI)

6 /8

அதாவது, இரண்டு ஆணுறைகளை பயன்படுத்துவது கூடுதல் பாதுகாப்பை தராது. மாறாக, அது ஆணுறை கிழிவதற்கு வழிவகுக்கும். ஏனென்றால் உடலுறவு மேற்கொள்ளும்போது, இரண்டு ஆணுறைகளிலும் உராய்வு காரணமாக கிழிசல் ஏற்பட்டு, விந்தணு கசிவதற்கான வாய்ப்பும் அதிகமாகிறது. (Image Source: Meta AI)

7 /8

எனவே, பாதுகாப்பான வகையில், ஒரே ஆணுறையை பயன்படுத்தினாலே போதுமானது. இரண்டு ஆணுறைகளை அணிந்துகொள்வது தவறான பழக்கமாகும். இதனை தவிர்த்துவிடவும். (Image Source: Meta AI)

8 /8

பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் உங்களுக்கு தகவல் அளிக்கும் பொருட்டு எழுதப்பட்டவை. இதனை பின்பற்றும் முன் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். இவை எதற்கும் ஜீ நியூஸ் (Zee Tamil News) பொறுப்பேற்காது. (Image Source: Meta AI)