வடை சாப்பிட்டால் ஆபத்தா? 70% இறப்புக்கு இதுதான் காரணம் - மருத்துவர் அலெர்ட்!

Health Risks Of Eating Vada: காலை மற்றும் மாலை நேரங்களில் பலரும் விரும்பி சாப்பிடுவதில் ஒன்று வடை. இதை சாப்பிடுவதால் எண்ணற்ற பிரச்னைகள் வரலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.

 

Health Risks Of Eating Vada: வடை சாப்பிடுவதால் சர்க்கரை நோய், உடல் பருமன், இருதய நோய் போன்ற பிரச்னைகள் ஏற்படலாம் என மருத்துவர் கூறுகிறார்.

1 /7

இந்தியர்களின் வீடுகளில் பிரதான உணவாக வடை இருக்கிறது. குறிப்பாக, பண்டிகை நாட்கள், விசேஷ தினங்களில் வடை என்பது இந்தியவர்களின் வீடுகளில் முக்கியமாக வைக்கப்படுகிறது. அதே நேரத்தில், காலை மற்றும் மாலை நேரங்களிலும் டீ, காபியுடனும் மக்கள் வடைகளை சாப்பிட்டு வருகின்றனர்.   

2 /7

இப்படி வடையை அதிகம் சாப்பிடுவது எண்ணற்ற பிரச்னைகளை ஏற்படுத்தலாம். வடையில் அதிகளவு எண்ணெய் சேர்க்கப்படுகிறது. இதனால், கெட்ட கொழுப்புகள் உடலில் சேர்ந்து, பல பிரச்னைகளை ஏற்படுத்துகிறது. எனவே, வடையை  சாப்பிடுவதையே தவிர்க்க வேண்டும் என மருத்துவர்கள் கூறி வருகின்றனர்.     

3 /7

இந்த நிலையில், வடை சாப்பிடுவதால் ஏற்படும் பிரச்னைகள் குறித்து மருத்துவர் அருணாச்சலம் முத்தையா கூறியுள்ளார். இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ பதிவிட்ட அவர், "வடை என்பது நாம் நாள்பட சாப்பிடும் 4 இட்லிக்கு அதிகமாக உடலுக்கு கிடைக்ககூடிய அதிக கலோரி கொண்டவை ஆகும்.     

4 /7

பெரு நகரங்களில் காலையில் நடைபயிற்சிக்கு பிறகு, சாலையோரங்களில் உள்ள கடைகளில் போண்டா, வடைகளை சாப்பிடுகின்றனர். இப்படி நடைபயிற்சிக்கு பிறகு வடை சாப்பிடுபவர்களுக்கு நடைபயிற்சி பற்றி புரிதல் இல்லை என்பது தான் உண்மை.  நாம் ஒருநாளைக்கு 3 மடங்கு அதிகமாக சாப்பிடுகிறோம். இதனால், உடல் பருமன், நீரிழிவு நோய்கள், ரத்தக் கொதிப்பு, இருதய பிரச்னைகள் ஏற்படலாம். இது தான் 70 சதவீத இறப்புக்கு காரணம் என சொல்கிறோம்.    

5 /7

எனவே, காலை உணவில் வடை போன்றவற்றை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். மேலும், மதிய நேரங்களில் அதிகப்படியான காய்கறிகள், பழங்களை எடுத்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் உடலும்  ஆரோக்கியமான இருக்கும்" என்றார்.     

6 /7

எனவே, காலை நேரத்தில் அதிக எண்ணெய் உள்ள உணவு பொருட்களை தவிர்க்க வேண்டும்.  அதற்கு பதிலாக ராகி தோசை, ராகி இட்லி போன்ற பயிறு தோசைகளை எடுத்துக் கொள்ளுங்கள். இல்லையெனில் இட்லி, தோசையுடன் பழங்கள் அல்லது காய்கறிகளையும் சேர்த்துக் கொள்ளுவது அவசியம்.  

7 /7

மூன்று வேளை உணவிலும் பழங்கள், காய்கறிகளை சேர்ப்பது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது எனவும் மருத்துவர் அருணாச்சலம் கூறுகிறார். மேலும், அதிகப்படியான தண்ணீர் குடிக்க வேண்டும் என்றும் கூறுகிறார்.